Cobra Memes: மண்ணுளி பாம்பை வித்துட்டாங்க செட்டியார்.. ட்ரிம் பண்ணாலும் விட மாட்டானுங்க போல!
சென்னை: கடாரம் கொண்டான் படத்திற்கு 3 ஆண்டுகள் கழித்து தியேட்டரில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படம் புதன்கிழமை வெளியானது.
பல வித கெட்டப்புகளில் நடித்திருக்கிறாரே விக்ரம் நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது வைத்த பெரிய நம்பிக்கையை அவர் ஒட்டுமொத்தமாக போட்டு உடைத்தார் என படத்திற்கு எதிரான ட்ரோல் மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

20 நிமிடங்கள் கட்
சியான் விக்ரமின் கோப்ரா படத்திற்கு முதல் நாளே வாஷ் அவுட் விமர்சனங்கள் வெளியான நிலையில், 20 நிமிடங்கள் படத்தை வெட்டித் தூக்கி உள்ளது தயாரிப்பு தரப்பு. அந்த 20 நிமிட படக் காட்சிகள் எடுக்க எத்தனை நாள் எவ்வளவு பேரின் உழைப்பு மற்றும் தயாரிப்பாளரின் எத்தனை கோடி பணம் செலவாகி இருக்கும் என்பதை இயக்குநர் உணரவில்லையே என அஜய் ஞானமுத்துவை விளாசி வருகின்றனர் விக்ரம் ரசிகர்கள்.

அந்த சீனும் காப்பி
வலிமை படத்தின் கிளைமேக்ஸ் சீன் ஜாக்கி சானின் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக ட்ரோல் செய்யப்பட்டதை போல, தற்போது சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் அந்த போலீஸ் ஸ்டேஷன் விசாரணை சீனும் ஹாலிவுட் குறும்படமான Insiderல் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். (ஷார்ட் பிலிம்ல இருந்து காப்பியடிச்சாலும் கண்டு பிடிச்சிடுறாங்களே)

ஏகப்பட்ட மீம்ஸ்
மேலும், கோப்ரா படத்தை வைத்து ஏகப்பட்ட மீம்களை நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு போட்டுத் தாக்கி வருகின்றனர். படத்தின் நீளம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டதற்கும், முதல் நாள் படம் பார்க்கும் ஆடியன்ஸ் எல்லாம் என்ன பரிசோதனை எலியா? என கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றி வருகின்றனர்.

மண்ணுளி பாம்பு
கோப்ரான்னு சொல்லி மண்ணுளி பாம்பு கொடுத்து ஏமாத்திட்டாங்க செட்டியார் என நட்டி நடித்த சதுரங்க வேட்டை படத்தின் மீமையே போட்டு மரண ட்ரோல் செய்து வருகின்றனர் ரசிகர்கள். கொஞ்சம் தான் படம் லேக் அதுவும் 20 நிமிடத்தை ட்ரிம் பண்ண பிறகும் ஏன் இப்படி வன்மத்தை கக்குறீங்க என சியான் விக்ரம் ரசிகர்கள் சண்டைப் போட்டு வருகின்றனர்.

இது அதுல
சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் அமீர்கானின் தூம் 3 படத்தின் காப்பி என்றும் நெட்டிசன்கள் இது அதுல என வடிவேலு மீம்களை போட்டு வீடியோ மீமாகவே வெறுப்பேற்றி வருகின்றனர். விக்ரம் பண்ண புரமோஷன் எல்லாம் வீணாப்போச்சே என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

வெறித்தனமான நடிப்பு
காவல் நிலையத்தில் நடக்கும் அந்த விசாரணை காட்சியில் சியான் விக்ரமின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதற்கும் ஒரு மீமை போட்டு "நீ என்னப்பா ஒரு சீனுக்கே இப்படியொரு வெறித்தனமான பர்ஃபார்மன்ஸ கொடுக்கிற" என படத்தின் குறைகளை ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும் விக்ரமின் நடிப்பை பாராட்டாமல் இல்லை.


Click it and Unblock the Notifications











