சாணியில் குளிப்பதெல்லாம் டாஸ்க்கா... கடுப்பாகும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே டாஸ்க்குகள் கடுமையாக நடத்தப்படாமல் எளிமையாக நடத்தப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் குறை கூறி வந்தனர்.

கடந்த சீசன்களை ஒப்பிடுகையில் இந்த சீசனில் சிறுபிள்ளை தனமான டாஸ்க்குகளே நடத்தப்பட்டு வருவதாக கூறி வந்தனர். டிக்கெட் டு ஃபினாலேவிற்காக கடைசியாக சிபி மற்றும் அமீர் இடையே நடத்தப்பட்ட உடல் வலிமையை சோதிக்கும் டாஸ்க்கை மட்டுமே ரசிகர்கள் பாராட்டினர்.

புதிய டாஸ்க்

புதிய டாஸ்க்

தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து கொண்டிருக்கையில், நேற்று லக்சுரி பட்ஜெட் டாஸ்க் என அறிவிக்கப்பட்டது. இதில் Dare, Sacrifice என இரண்டு போன்கள் வைக்கப்பட்டு, தில் இருந்தால் ஹலோ சொல்லு என்ற பெயரில் இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. எந்த போன் அடிக்கிறதோ அதை ஒருவர் எடுத்து பேச வேண்டும். அப்போது பிக்பாஸ் சொல்லுவதை வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது.

நிரூப்புடன் சண்டை

நிரூப்புடன் சண்டை

முதலில் வந்த போனை நிரூப் எடுத்து பேசினார். அவரிடம் உப்பு, சர்க்கரை, வெங்காயத்தை ஸ்டோர் ரூமில் வைத்து விட வேண்டும். இந்த வாரம் முழுவதும் உப்பு, சர்க்கரை, வெங்காயம் இல்லாமல் தான் நீங்கள் சமைத்து சாப்பிட வேண்டும் என சொல்லப்பட்டது. இதை நிரூப் சொன்ன போது வீட்டில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பயங்கர வாக்குவாதம் நடைபெற்றது.

சிபி சொன்னதும் ஓகே

சிபி சொன்னதும் ஓகே

பிறகு வந்த ஃபோனை சிபி எடுத்த போதும் பிக்பாஸ் அதையே சொன்னார். அப்போதும் அனைவரும் மாறி மாறி பேசி, ஒருவழியாக கடைசியில் உப்பு, சர்க்கரை, வெங்காயத்தை ஸ்டோர் ரூமில் வைக்க முடிவு செய்தனர். வைத்த பிறகும் திருட்டு தனமாக அதை எடுத்து வைக்க முயற்சி செய்தனர்.

அமீரிடம் சொன்ன டாஸ்க்

அமீரிடம் சொன்ன டாஸ்க்

இதைத் தொடர்ந்து வந்த போனை அமீர் எடுத்தார். அவரிடம் வீட்டில் உள்ள அனைவரும் மாட்டு சாணம் கலந்த தண்ணீரை உடலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இறுதிப் போட்டிக்கு சென்று விட்டதால் நீங்கள் இதை செய்ய வேண்டாம் என சொல்லப்பட்டதால், அவர் கிண்டலாக சிரித்தபடி மற்றவர்களை செய்ய சொன்னார்.

யோசிக்காமல் செய்த போட்டியாளர்கள்

யோசிக்காமல் செய்த போட்டியாளர்கள்

உப்பு, சர்க்கரை, வெங்காயம் சாப்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீண்ட விவாதம் நடத்திய போட்டியாளர்கள், சாணியில் குளிக்க வேண்டும் என சொன்னதற்கு சிறிது நேரம் மட்டுமே யோசித்தனர். எதிர்ப்பு ஏதும் சொல்லாமல் அனைவரும் மாட்டு சாணம் கலந்த தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டனர்.

இதெல்லாம் டாஸ்க்கா

இதெல்லாம் டாஸ்க்கா

இதை பார்த்த ரசிகர்கள், சாணியில் குளிப்பதெல்லாம் ஒரு டாஸ்க்கா. 94 நாட்களாக சாதாரணமான டாஸ்க்குகளை நடத்தி விட்டு, கடைசி நேரத்தில் எதற்காக இப்படிப்பட்ட டாஸ்க் எல்லாம் நடத்துகிறீர்கள் என கடுப்பாகி பிக்பாசை கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X