இதுக்கு பேரு டாஸ்க்கா...கடுப்பாகி பிக்பாசை கழுவி ஊற்றும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸில் ஃபினாலே டிக்கெட்டை பெறுவதற்கான இறுதிக்கட்ட டாஸ்க் என்பதால், இனி வரும் டாஸ்க்குகள் மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரையும் ஏமாற்றியதுடன் கடுப்பாகும் வகையில் ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளதால் பிக்பாசை கண்டபடி விமர்சித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Recommended Video
தற்போது நடைபெற்று வரும் 13 வது வாரத்தில் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போகும் அந்த ஒருவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் நாளே அனைவரும் ஒன்று கூடி பேசி, நிரூப்பை வெளியேற்றினர். இதுவே நேர்மையானது இல்லை என ரசிகர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

டார்க்கெட் செய்யப்பட்ட பாவனி, தாமரை
அடுத்த நாளில் நடத்தப்பட்ட முட்டை டாஸ்க்கும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. தாமரை - பிரியங்கா சண்டை கூட டிஆர்பி.,க்காக நடத்தப்பட்டதாகவும், நேர்மையாக இந்த போட்டி நடத்தப்படவில்லை எனவும், பாவனி மற்றும் தாமரையை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்களை டார்கெட் செய்து இந்த போட்டி நடத்தப்பட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். இது டாஸ்கின் போது நிரூப், அமீர் ஆகியோர் வெளிப்படுத்திய முகபாவனையில் இருந்து நன்றாக தெரிந்தது.

சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு
இதைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட முட்டை வீசும் டாஸ்கிலும் யாரும் நேர்மையாக விளையாடவில்லை. எல்லோரும் நடிக்கிறார்கள். ஒவ்வொருவரின் தனித்துவம், உடல் வலிமை, மன வலிமையை சோதிக்கும் வகையில் டாஸ்க்குகள் நடத்துவதை விட்டு ஏன் சின்ன பிள்ளைத்தனமாக இது போன்ற டாஸ்க்குகள் நடத்துகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

அடுத்த கட்டத்திற்கு இருவர்
இந்நிலையில் 88 ம் நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் வரிசையாக கட்டம் போட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்கள் கையில் சிவப்பு மற்றும், பச்சை விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்களின் பதில்களும், பார்வையாளர்களாக இருக்கும் போட்டியை விட்டு வெளியேறியவர்களின் பதிலும் ஒன்றாக இருந்தால் அந்த போட்டியாளர்கள் ஒரு அடி முன்னேறுவார் என கூறப்படுகிறது. எந்த இரண்டு நபர்கள் முதலில் இறுதிக்கட்டத்தை எட்டுகிறார்களோ அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என சொல்லப்பட்டது.

பாவனி பற்றிய டாஸ்க்
முதல் டாஸ்க்கில் சஞ்சீவ் மற்றும் சிபி முதலில் முன்னேறி வருவதாக காட்டப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில், பார்வையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள். இதில் பாவனி, அபினய் விஷயத்தில் அமீர் தன்னை இன்ஃப்ஸயன்ஸ் செய்வதாக கூறினார். அதை பற்றி பேச வேண்டாம் என ராஜு தடுத்தும், அது என் இஷ்டம் என்கிறார்.

ஷாக்கான பாவனி
அதற்கு பிறகு வரும் பிரியங்காவும் பாவனி தொடர்பாகவே அமீரிடம் கேள்வி கேட்கிறார். ஸ்டாடர்ஜிக்காக பாவனியுடன் பழகுகிறாய் என பிரியங்கா சொல்ல, அதற்கு பச்சை விளக்கு காட்டி ஆம் என்கிறார் அமீர். இதை கேட்டு பாவனி ஷாக்காகி நிற்கிறார்.

இதெல்லாம் டாஸ்க்கா
இந்த ப்ரோமோக்களை பார்த்து விட்டு பிக்பாசை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். விளக்கு பிடிப்பதெல்லாம் டாஸ்க்கா. சஞ்சீவ் டிக்கெட் டு ஃபினாலேவை வெற்றி பெற்ற வைத்து, இறுதிப் போட்டிக்கு விஜய்யை கூப்பிட்டு, டிஆர்பி.,யை ஏற்ற பிளான் பண்ணிருக்கீங்களா. பாவனி லவ் பற்றி விவாதிப்பது டாஸ்க்கா. ஃபினாலேவிற்கும் இந்த கேள்விக்கும் என்னய்யா சம்பந்தம்.

பிக்பாஸ் தான் காரணமா
ஃபிசிக்கல் டாஸ்க் வைத்து, தகுதியான ஆளை தேர்வு செய்யுங்கள் என்றால் இப்படி போட்டியை நடத்துகிறீர்களே. இந்த சீசனின் டிஆர்பி குறைந்ததற்கு காரணம் போட்டியாளர்கள் இல்லை. பிக்பாஸ் தான். செம போரடிக்குதுப்பா இத பார்க்கவே என நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











