Don't Miss!
- Sports
"ஹர்திக் பாண்ட்யா புத்திசாலி இல்லை".. 2வது டி20ல் பெற்ற தோல்வி.. பாக். முன்னாள் வீரர் கடும் விளாசல்!
- Technology
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- News
ரூ.300 கோடியா? சாலையோர வியாபாரிக்கு "பறந்த" வரி ஏய்ப்பில் நோட்டீஸ்! அதிர்ந்த உ.பி ஜிஎஸ்டி அதிகாரிகள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சுயநலமே இல்லாமல் எப்போதும் மற்றவர்களை ஊக்குவிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அஜித்துக்கு பிடிச்ச அந்த சீனையே வைக்கலயா.. துணிவு இயக்குநரை துவைத்து எடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: வலிமை படம் வெளியான சமயத்தில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் தன் மீது வைக்கப்பட்டது வருத்தத்தை அளித்தது என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்த ஹெச். வினோத், சொன்ன இன்னொரு விஷயம் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் அஜித்துக்காக உருவாக்கிய கதையை படமாக பண்ணுவதற்கு முன்னதாக பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை பண்ணினார் எனக் கூறப்பட்டது.
வலிமை படத்தின் கதையும் நடிகர் அஜித் சொன்ன கதை என சொல்லியிருந்த ஹெச். வினோத் சமீபத்திய பேட்டியில், துணிவு படத்தின் கதை ஒரு சின்ன பட்ஜெட் படத்தின் கதை என்றும் அதை கேட்டதுமே அஜித் ஓகே சொல்லி பெரிய பட்ஜெட்டாக எடுக்க வைத்து விட்டார் எனக் கூறியுள்ளார்.
துணிவு
அயோக்கியர்களின்
ஆட்டம்..
ஹெச்
வினோத்
சொன்னத
பாருங்க!

வினோத் கதை எது
அப்போ உண்மையாகவே அஜித்துக்காக ஹெச். வினோத் உருவாக்கிய அந்த கதை தான் எது? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி ஒரு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பாக ஹெச். வினோத் சொல்லும் புதிய கதை நன்றாக இருக்கிறதே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

துணிவு ஓகே ஆக காரணம்
துணிவு படத்தின் மொத்த கதையையும் நடிகர் அஜித் கேட்கவில்லை என்றும் அவருக்கு நான் சொன்ன ஒரு காட்சி பிடித்துப் போக படமாக பண்ணலாம் எனக் கூறிவிட்டார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அஜித்துக்கு பிடித்த அந்த காட்சி படத்தில் இடம்பெறாமல் போய் விட்டது என இயக்குநர் ஹெச். வினோத் அளித்துள்ள பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஹெச். வினோத் செய்கை
நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூரின் படமாக வந்தது. வலிமை படம் முழுக்க முழுக்க அஜித்தின் படமாக வந்த நிலையில், இந்த துணிவு படத்தில் அஜித்துக்கு பிடித்த அந்த காட்சியையும் ஹெச். வினோத் தூக்கி விட்ட நிலையில், இது முழுக்க இயக்குநர் படமாக வந்திருக்கும் என்றும் ஹெச். வினோத் தரமான செய்கை செய்ய காத்திருக்கிறார் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த சீனே இல்லையா
அதே சமயம் அஜித்துக்கு பிடித்து துணிவு படம் எடுக்க காரணமாக இருந்த அந்த காட்சியையே இயக்குநர் ஹெச். வினோத் படத்தில் இருந்து எப்படி நீக்கலாம். அஜித்துக்கான மரியாதையை அவர் கொடுக்கவில்லை என படம் வரட்டும் ஏதாவது மிஸ் ஆனால் ஹெச். வினோத் அவ்வளவு தான் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டிசம்பர் 9
பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரு பாடல்கள் வெளியான நிலையில், அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகி இணையத்தை ஆட்சி செய்ய காத்திருக்கிறது. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாதனையை சில்லா சில்லா பாடல் முறியடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் அதற்கான வேலைகளில் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் ஒன்று திரட்டி வருகின்றனர்.