Don't Miss!
- News
உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்ன ஜெயம் ரவி முயல்வேட்டைக்கு போறாரா? டீசரை பார்த்த பிறகாவது கூஸ்பம்ப்ஸ் வருமா? ரசிகர்கள் கேள்வி?
சென்னை: ஆஜானுபாகுவாக நம் நாட்டின் மன்னர்கள் இருந்தார்கள் என கதைகளிலும், வரைபடங்களில் பார்த்து வளர்ந்த ரசிகர்களுக்கு, ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியின் தோற்றத்தை பார்த்து அந்தளவுக்கு மெய்சிலிர்த்துப் போகவில்லை என்பது பெரிய குறையாகவே உள்ளது.
Recommended Video
படத்திற்கு முன்னதாக வெளியாகும் பட போஸ்டர்கள் மற்றும் டீசர், டிரைலர்கள் தான் படத்திற்கான விளம்பர யுக்தியே, அது எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்குத் தான் ரசிகர்கள் அடித்து பிடித்து முதல் நாள் முதல் காட்சியே படத்தைப் பார்த்துவிட வேண்டும் என ஓடி வந்திருப்பார்கள்.
ஆதித்த கரிகாலன், நந்தினி, வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி வர்மன் கதாபாத்திரங்களை முதலில் அறிமுகம் செய்யாமல், சுந்தரச் சோழர், பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியன், வீரபாண்டியன் என கதை மாந்தர்களை முதலில் அறிமுகப்படுத்தி விட்டு இவர்களை பின்னர் அறிமுகப்படுத்தி இருக்கலாம் என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
என்னது விஜய் இன்ஸ்டாகிராம்ல வருகிறாரா? ஃப்ரொபைலும் ரெடியாயிடுச்சா.. சூப்பர் தகவலா இருக்கே!

பெரிய கதை
ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு தமிழர்களின் பெருமையான கதை. அதில், ஏகப்பட்ட கதைமாந்தர்கள் உள்ளனர். சோழர்கள், பாண்டியர்கள், இலங்கையை சேர்ந்த துறவிகள் என பொன்னியின் செல்வன் கதை தமிழ்நாட்டில் தொடங்கி இலங்கை வரை செல்லும். இவ்வளவு பெரிய கதையை இரண்டு பாக படமாக சுருக்கி இயக்குநர் மணிரத்னம் எப்படி எடுத்துள்ளார்? என்கிற கேள்வியும் பொன்னியின் செல்வன் நாவலுக்கான நியாத்தையும் பிரம்மாண்டத்தையும் செய்திருப்பாரா? என்கிற கேள்விகளும் நிச்சயம் ரசிகர்களுக்கு எழத்தான் செய்யும்.

ஈர்க்கவில்லை
இதுவரை வெளியான பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் நன்றாக இருந்தாலும் கூட ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் கூஸ்பம்பஸ் கொடுக்கும் விதமாகவும், அந்த போஸ்டர்களை பார்த்தவுடன் அப்படியே வால்பேப்பர்களாக வைக்க வேண்டும் என்றும் கூட தோன்றாத அளவுக்கு உருவாக்கப்பட்டு இருப்பது பெரும் பின்னடைவாகவே தெரிகிறது. அதிலும், தற்போது வெளியாகி உள்ள ஜெயம் ரவி போஸ்டர் இன்னும் பவர்ஃபுல்லாக இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முயல் வேட்டைக்கு போறாரா
இப்படி கம்பீரமான ராஜராஜ சோழன் படத்தை ஃபர்ஸ்ட் லுக்காக போடுவாங்கன்னு பார்த்தா, முயல் வேட்டைக்கு போன போஸ்டரை போட்டுருக்கீங்களே.. படம் நிச்சயம் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் என நம்புகிறோம். தலை சிறந்த படமாக பொன்னியின் செல்வன் வரும் என இன்னமும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறொம் சொதப்பிடாதீங்க மணிரத்னம் என ரசிகர்கள் கழுவி ஊற்றினாலும், நம்பிக்கையை கைவிடாமல் இருக்கின்றனர்.

டீசருக்கு வெயிட்டிங்
ட்ரோல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்று மாலை வெளியாகப் போகும் பொன்னியின் செல்வன் டீசருக்காக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் தமிழில் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர். டீசருக்கு எப்படியெல்லாம் விமர்சனம் போகுதோ தெரியவில்லை!