மீண்டும் பிரியங்காவை வறுத்தெடுக்கும் கமல்...மாநாடு ஸ்டைலில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 பேருடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 90 நாட்களை கடந்து விட்டது. தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக இறுதிப் போட்டிக்குள் சென்று விட்டார் அமீர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 2nd January 2022 - Promo 2 | Raju-வை சீண்டும் Niroop

வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்த அமீர் இறுதிப் போட்டிக்கு சென்று விட்டார். மற்றொரு வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த சஞ்சீவ் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் நாளை ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார் என நேற்றைய எபிசோடின் முடிவில் கமல் கூறி விட்டு சென்றார்.

இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா

இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா

இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா அல்லது சிங்கிள் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவர் மட்டும் தான் வெளியேற போகிறார் என்றால், நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளது. ஆனால் அமீரை தவிர்த்து இன்னும் 6 பேர் வீட்டிற்குள் உள்ளனர். என்ன செய்ய போகிறார் பிக்பாஸ் என்ற கேள்வியும் எழுகிறது.

நிரூப்பை ஏமாற்றி கமல்

நிரூப்பை ஏமாற்றி கமல்

நிரூப் சவால் விட்ட படி கமல், நேற்று அவர் தான் முதலில் காப்பாற்றப்படுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கி வழக்கம் போல் முதலில் ராஜுவை காப்பாற்றுவதாக அறிவித்தார் கமல். அமீர், ராஜு தவிர மீதமுள்ள 6 பேரில் யார் இன்று வெளியேற போகிறார் னெ்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இன்றைக்கும் பிரியங்கா

இன்றைக்கும் பிரியங்கா

இந்நிலையில் 91 வது நாளான இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் இன்றைக்கும் பிரியங்காவை கேள்விகளால் வறுத்தெடுக்கிறார் கமல். நேற்று பேசியதன் தொடர்ச்சியாக இன்றும் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி கமல் பேச உள்ளார்.

அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா

அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா

முதல் ப்ரோமோவில், அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா பிரியங்கா? என்கிறார் கமல். அதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, இப்போ மட்டுமில்ல எப்பவுமே. வெளியேயும் சரி, இங்கேயும் சரி மற்றவர்கள் அன்பு காட்டினால், அதை விட அதிகமாக காட்டுவேன் என்கிறார். அப்போதும் விடாத கமல், இல்லை. அவர்கள் இதை உங்களின் வெற்றிக்காக பயன்படுத்துகிறீர்கள் என்கிறார் என கேட்கிறார்.

என்னை விட்டுடுங்க சார்

என்னை விட்டுடுங்க சார்

அதற்கு சமாளித்து ஒரு வழியாக பதில் சொல்லும் பிரியங்கா, அது என் வெற்றிக்காக பயன்படுதுன்னா சந்தோஷமான விஷயமா நான் எடுத்துக்கிறேன் என்கிறார். என்ன அமீர் சிரிக்கிறீங்க என அமீரிடம் கேட்க, அவர், இந்த ஒரு கேள்வில மட்டும் என்னை விட்டுடுங்க சார் என சிரித்தபடி சொல்கிறார். கமலும் அது எப்படி முடியும் என்கிறார்.

மாநாடு ஸ்டைலில் கலாய்

மாநாடு ஸ்டைலில் கலாய்

இதை பார்த்த நெட்டிசன்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எபிசோட்னாலே கமல் சார் வருவாரு, பிரியங்காவை வறுத்தெடுப்பார். அப்புறம் அடுத்த வாரமும் ரிப்பீட்டு என மாநாடு ஸ்டைலில் கலாய்த்துள்ளனர். கமல் மற்றும் நிரூப்பிற்கு எப்பவுமே பிரியங்கா தானா, வேற யாரையும் கேள்வி கேட்க மாட்டாங்களா.

டோட்டல் வேஸ்ட்

டோட்டல் வேஸ்ட்

உண்மையை சொல்ல வேண்டுமானால் பிரியங்கா இல்லை என்றால் பிக்பாஸ் சீசன் 5 டோட்டல் வேஸ்ட். பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே 10 வாரமாக நாமினேஷில் இருந்து காப்பாற்றப்படும் ஒரே பெண் போட்டியாளர் பாவனி தான். பிரியங்காவும், ராஜுவும் தான் ஃபைனலுக்கு போவாங்க என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X