வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா...கார்த்தியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சென்னை : படம் நல்லா இருக்கு என பாராட்டி, அந்த படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்ததற்காக கார்த்தியை நெட்டிசன்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். இதை வைத்தே பெரிய விவாதத்தையும் நடத்தி வருகிறார்கள்.

கன்னட ராக்கிங் ஸ்டார் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசானது. பான் இந்தியன் படமாக, 2018 ம் ஆண்டு வெளிவந்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

கேஜிஎஃப் 2 க்கு பாராட்டு

கேஜிஎஃப் 2 க்கு பாராட்டு

ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேஜிஎஃப் 2 படத்தை பார்த்து விட்டு படக்குழுவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துவதாக தெரிவித்திருந்தனர். தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள், டைரக்டர்கள் என பலரும் கேஜிஎஃப் 2 படத்தை பாராட்டி சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருந்தனர்.

பாராட்டிய கார்த்தி

பாராட்டிய கார்த்தி

இதே போல் இன்று நடிகர் கார்த்தியும் கேஜிஎஃப் 2 படம் பற்றி ட்விட்டரில் பாராட்டி இருந்தார். அதில், கேஜிஎஃப் 2 பெரிதாக கற்பனை செய்து கொண்டிருந்ததை கண்முன்னே தனித்துவமான ஸ்டைலில் பார்க்க வைத்துள்ளதற்கு பெரிய கைதட்டல்கள். விஷுவல், டயலாக், ஆக்ஷன் ஆகியன படத்தை மகத்துவமானதாக ஆக்கி உள்ளன. தாயின் கனவின் சக்தி என்ன என்பதை திரையில் காட்டி உள்ளனர். மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பீஸ்ட் பற்றி எதுவும் சொல்லல

பீஸ்ட் பற்றி எதுவும் சொல்லல

இதை பார்த்த நெட்டிசன்கள், தமிழில் வலிமை, பீஸ்ட் படங்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்த்து, பாராட்டி, வாழ்த்து சொல்லாத கார்த்தி, கேஜிஎஃப் 2 படத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களை போன்றவர்களால் தான் தமிழ் சினிமா முன்னேறாமல் உள்ளது. இதில் இவருக்கு தமிழ் சினிமா செயலாளர் பொறுப்பு வேறு. வீர ராகவன் பற்றி எதுவும் சொல்லலியே. மற்ற மொழி சினிமாத்துறையினர் சினிமாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாக்காரர்கள் தங்களின் வளர்ச்சிக்காக சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறார் என கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

வின் பண்ணினா தான் பாராட்டு

வின் பண்ணினா தான் பாராட்டு

அதே சமயம் சிலர், சினிமாவிற்கு மொழி கிடையாது நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல போறாங்க. வின் பண்ணுன படத்துக்கு தான் வாழ்த்து சொல்ல முடியும். பீஸ்ட் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கன்னு கேட்டா, ஃபிளாப்ன்னு சொல்லுவார். அதை ஏற்றுக் கொள்ள தயாரா. அவர் ஐடில, அவர் விருப்பம் போல ட்வீட் போடுறாரு. உடனே தமிழ் சினிமாவிற்கு சப்போர்ட் இல்லைன்னு சொல்லுவீங்களா என்று கார்த்தி போட்ட ட்வீட்டை வைத்து விவாதமும் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X