மிக்சிங்கா? காப்பியா?...விருமன் ப்ரோமோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை : நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் ஃபர்ஸ்டெ சிங்கிளிற்கான ப்ரோமோ வீடியோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இருந்தாலும் கார்த்தி ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் பற்றி ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தையா இயக்கி உள்ள படம் விருமன். சூர்யாவின் 2 டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விருமன் ரிலீஸ் எப்போ

விருமன் ரிலீஸ் எப்போ

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்டாக எடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இந்த படம் எடுக்கப்பட்டது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் விருமன் படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாக படக்குழு அறிவித்தது. இந்த படம் ஜுலை மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்நிலையில் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளிற்கான ஒரு நிமிட ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. கஞ்சாப்பூ கண்ணாலே என துவங்குவதாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் இதை செமயாக கலாய்த்து வருகின்றனர். என்னப்பா...அப்பட்டமா இப்படி காப்பி அடிச்சிருக்கீங்களே என கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

 இப்படி ஒரு காப்பியா

இப்படி ஒரு காப்பியா

இதற்கு காரணம், இந்த பாடலின் ஆரம்பமே கொம்பன் படத்தின் சீனை நினைவுபடுத்துகிறது. மரத்தில் உட்கார்ந்து கொண்டு, தேனு...என கார்த்தி கூப்பிடுவது பருத்திவீரன் படத்தில் முத்தழகு என கூப்பிடுவதை நினைவுபடுத்துகிறது. கார்த்தி, பக்கா கிராமத்து கெட்அப்பில் தான் இருக்கிறார். ஆனால் ஒரு ஷாட்டில் கொம்பன் கார்த்தியை போலவும், மற்றொரு ஷாட்டில் பருத்திவீரன் கார்த்தி போலவும் தெரிகிறது. கார்த்தி மட்டுமல்ல பாவாடை தாவணியில் கிராமத்து பொண்ணாக வரும் அதிதியும், முத்தழகு கேரக்டரையே கண்முன் கொண்டு வருகிறார்.

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே

ப்ரோமோவில் வரும் காட்சிகள் தான் இப்படி என்றால், பாடல் இசையை கேட்கவே வேணாம். காட்சிகளாவது கார்த்தியின் முந்தைய படங்கள் போல தான் இருக்கு. ஆனால் பாடல், ஜெயம் ரவி நடத்த தாஸ் படத்தில் வரும் சக்க போடு போட்டாளே என்ற பாடலை நம்மையும் அறியாமலேயே முணுமுணுக்க வைக்கிறது. காப்பின்னு சொல்றதா இல்லை மிக்சிங் என சொல்வதா என தெரியாமல் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

காப்பியா...மிக்சிங்கா

காப்பியா...மிக்சிங்கா

மொத்தத்தில் இந்த ப்ரோமோ வீடியோவில், பருத்திவீரன், கொம்பன், தாஸ் என பழைய படங்களின் காட்சிகளை எடுத்து, மொத்தமாக மிக்சியில் போட்டு அடித்து கொடுத்ததை போல் உள்ளது. பல பழைய படங்கள் இருக்கிறதே, விருமன் படத்தை ஒரு இடத்தில் கூட நினைவில் கொண்டு வர முடியவில்லை. இதில் ஆறுதல் என்னவென்றால் அதிதியின் மரண குத்து ஆட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X