Lokesh Kanagaraj: களம் 8ல லோகேஷ் கனகராஜ போட்டு கலாய்ச்சிட்டு இருக்காங்க.. மிஸ் பண்ணாதீங்க!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியான படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, ஆமிர் கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார் லோகேஷ். அதன் பின்னர் நடைபெற்ற கேள்வி பதில், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது தொடர்ந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது கோவையில் ரசிகர்களுடன் அமர்ந்து கூலி படம் பார்த்த லோகேஷ் கனகராஜ் கேள்வி பதில் ஷெஷனில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், உங்களது மாநாகரம் படத்தில் நடிகர் ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்ற கேள்வியை கேட்டார். இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத லோகேஷ் கனகராஜ், இன்ப அதிர்ச்சியில் இந்த கேள்வியைக் கேட்ட, ஸ்ரீ கதாபாத்திரத்திற்கு பெயர் இல்லை என்று கண்டுபிடித்தது நீ மட்டும் தான். உண்மையாலுமே நீ 8ஆம் வகுப்பு தான் படிக்கிறாயா என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்று பதில் அளித்தார். மேலும் கதை எழுதும் போது அந்த கதாபாத்திரத்திற்கு பரணி என்று பெயர் வைத்திருந்தேன்.

Netizens Trolls Lokesh Kanagaraj After He Said Can t Do Movie For Fans Expectations

லோகேஷ் கனகராஜ்: அதேபோல் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "இதுவரை நான் எனது படங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை, ஆனால் ரசிகர்களின் அபரிமிதமான எதிர்பார்ப்புதான் என்னை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது. இது என்னை மட்டுமல்ல, எல்லா நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் உயர்த்தியுள்ளது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் எங்களால் சினிமாவே உருவாக்க முடியாது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த எதிர்பார்ப்பை குறை கூற முடியாது. உதாரணமாக, 'கூலி' படத்தை எடுத்துக் கொள்வோம். நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது என்றோ, எல்.சி.யு-வில் படம் உள்ளது என்றோ, இல்லை என்றோ எதுவும் கூறவில்லை. ஆனாலும், இவை அனைத்தையும் ரசிகர்களே பேசி, ரசிகர்களே உருவாக்கிய விஷயங்கள். நான் ஒரு டிரைலர் கூட வெளியிடவில்லை. படத்தின் 18 மாத படப்பிடிப்பு முடியும் வரை, ரசிகர்களின் எதிர்பார்ப்பை முடிந்த அளவு அதிகரித்து வைத்திருந்தேன். ரஜினி சார் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

கலாய்: அதேபோல், லோகேஷ் கனகராஜ் படம் என்றால் அதற்கென ஒரு ஹைப் இருக்கிறது. அதை எப்படித் தடுக்க முடியும்? அதற்கு வழியே இல்லை. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் கதையை என்னால் ஒருபோதும் எழுத முடியாது. அதற்கு நான் முயற்சி செய்யவும் மாட்டேன். ஆனால், நான் எழுதும் கதை அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தால், அதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருந்தார். இவரது இந்த பதில் இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து இணையவாசிகள் அவரை கலாய்த்து வருகிறார்கள். அதாவது, எனது சம்பளம் 50 கோடிகளை விடவும் ரசிகர்கள் செலவழிக்கும் ரூபாய் 150 எனக்கு மிகவும் பெரியது என்று சொன்ன லோகேஷ் கனகராஜா, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எல்லாம் என்னால படம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு இருக்காரு? என அந்நியன் பட மீம் டெம்ப்ளேட் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X