இதோடா பிக் பாஸ் சீசன் -5 ஜூலி...பாவனியை சும்மா விளாசி தள்ளும் நெட்டிசன்கள்!

சென்னை: அபிஷேக் ராஜா வெளியேறிய பின்னர் யாருடா இனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் மீம் க்ரியேட்டர்களுக்கும் கன்டென்ட் கொடுக்கப் போறாங்க என ஏங்கி இருந்த ரசிகர்கள் மத்தியில் பாவனி வசமாக சிக்கி உள்ளார்.

தாமரை செல்வி காயினை சுருதி திருடிய நிலையில், சுருதிக்கு உதவி பண்ண பாவனிக்கும் தாமரைக்காக வாதாட வந்த ராஜு பாய்க்கும் இடையே பயங்கர சண்டை ஆரம்பித்து உள்ளது.

ஒரு பக்கம் ராஜு செய்தது சரி என்றும் மறு பக்கம் பாவனி செய்தது தான் சரி என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களையும் ட்ரோல் வீடியோக்களையும் போட்டு வருகின்றனர்.

முதல் குறும்படம்

முதல் குறும்படம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் முதல் குறும்படம் பாவனிக்குத் தான் போட்டு காட்ட வேண்டும் என ரசிகர்கள் 5 நிமிஷத்துக்கு முன்னாடி என அவங்களே ஏகப்பட்ட குறும்படத்தை போட்டு வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே நிரூப் கையில் எழுதியது குறித்து கமல் குறும்படம் போடாமல் சொல்லி காட்டிய நிலையில், இந்த வாரம் குறும்படம் இருக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஒரு வாரம் டிராமா

ஒரு வாரம் டிராமா

"நேத்து பாவனி இதை வச்சி தாமரை செல்வி ஓரு வாரம் டிராமா போடுவாங்கனு சொன்னாங்க.. ஆனா உண்மை என்னனா சோறு விசயத்தை வச்சி ஆல்ரெடி ரெண்டு வாரம் ஒட்டிட்டாங்க.. இனி இந்த காயின் விசயத்தை வச்சி எவ்வளவு வாரம் ஓட்ட போறாளோ தெரியல" என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த சீசன் ஜூலி

இந்த சீசன் ஜூலி

இன்னும் எத்தனை சீசன் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியை ரசிகர்கள் மறக்க மாட்டேன் என்கிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் இந்த சீசன் ஜூலி இவர் தான் என கலாய்த்து வரும் நெட்டிசன்கள் இந்த முறை பாவனி தான் இந்த சீசன் ஜூலி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பொய் பேசும் பாவனி

பொய் பேசும் பாவனி

பாவனி நான் சுருதிக்கு ஹெல்ப் பண்ணவே இல்லை என மாற்றி மாற்றி பேசுவதை பார்த்த ரசிகர்கள்.. என்னை இன்னும் நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா என பங்கமாக கலாய்த்து பாவனி பக்காவாக திட்டமிட்டு சுருதி திருட உதவிய காட்சிகளை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நேரம் அபிஷேக் இருந்திருந்தா

இந்நேரம் அபிஷேக் இருந்திருந்தா

இந்த பஞ்சாயத்தின் போது அபிஷேக் ராஜா இருந்திருந்தால் அந்த சீன் இன்னமும் களைகட்டி இருக்கும் என்றும் அபிசேக் ராஜா இல்லாத பிக்பாஸ் வீடு.. உப்பு போடாத சாப்பாடு போல சப்புன்னு இருக்கு" என அபிஷேக் ராஜா ஆர்மியினர் கமெண்ட் செய்து வருகின்றனர். அபி இருந்திருந்தால் நிச்சயம் பாவனிக்கு சப்போர்ட் செய்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

கமலுக்கு கன்டென்ட்

கமலுக்கு கன்டென்ட்

இந்த வாரமும் பிக் பாஸ் போட்டியாளர்களை ஒரு பிடி பிடித்து விட கமல் சாருக்கு ஏகப்பட்ட கன்டென்ட்கள் கிடைத்துள்ளன என்றும் பாவனி, சுருதிக்கு ஒரு டோஸ், ராஜுக்கு ஒரு டோஸ் விட்டு பஞ்சாயத்தை முடித்து விட போறாரு பாருங்க என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X