சரத்குமார் பீட்சா எடுத்துட்டு வந்தா.. பிரியங்கா முதல் ஆளா வெளியே போயிருப்பாங்க.. தெறி மீம்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியா அல்லது கோடீஸ்வரன் நிகழ்ச்சியா என்றே ரசிகர்கள் ஒரு நிமிடம் கன்ஃப்யூஸ் ஆகும் அளவுக்கு ரூ. 3 லட்சம் பணத்துடன் சரத்குமார் உள்ளே வந்தார்.
வெறும் ரூ. 3 லட்சம் பணத்துடன் வெளியே போவார்களா? போட்டியாளர்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பணத்திற்கு பதிலாக சரத்குமார் பீட்சா எடுத்து வந்திருந்தால் முதல் நபராக பிரியங்கா அதை வாங்கிக் கொண்டு வெளியே இருப்பார் என கலாய்த்து வருகின்றனர்.

சோறு தான் முக்கியம்
பிக் பாஸ் தமிழ் 5 சீசன் போட்டியாளரான பிரியங்கா நமக்கு எப்பவுமே சோறு தான் சாமி முக்கியம் என கேமரா கண்கள் திரும்பும் போதெல்லாம் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்கிறார். சண்டை போடும் நேரத்தில் இறங்கி சண்டை போடும் பிரியங்கா உடனடியாக சமாதானமும் ஆகி விடுவதால் ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது.

ரன்னர் அப்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இப்போது வரை இரண்டாம் இடத்தில் பிரியங்கா கெத்தாக இருக்கிறார். இந்த சீசனில் பெண் போட்டியாளருக்கு டைட்டில் கொடுக்கப்பட்டால் பிரியங்காவுக்குத் தான் டைட்டில் கிடைக்கும். ஓட்டுக்களின் படி கொடுக்கப்பட்டால் பிரியங்கா நிச்சயம் ரன்னர் அப் என்பது உறுதி என நிரூப் போலவே ஏகப்பட்ட ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

பணத்துக்கு பதில் பீட்சா
சரத்குமார் ரூ. 3 லட்சம் பணப்பெட்டியுடன் வராமல் பீட்சா உடன் உள்ளே வந்திருந்தால் சரியான உணவு பிரியையான பிரியங்கா முதல் நபராக பறந்து போய் அதை வாங்கி தின்றுக் கொண்டே வெளியேறி இருப்பார் என ரசிகர்கள் இன்று வெளியான புரோமவை பார்த்து மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஏற்கனவே பஸ் டாஸ்க்கில் வெஜ் பீட்ஸா
Recommended Video

நல்ல ரீசனுக்கு எங்கே போவேன்
நாமினேட் பண்ண நிரூப்பிடம் வேற ஏதாவது நல்ல ரீசனா இருந்தா சொல்லி நாமினேட் பண்னு என சிபி கேட்டதையும் நெட்டிசன்கள் டாக்டர் பட காமெடி வசனங்களை போட்டு மீமாக மாற்றி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றனர். நல்ல ரீசனுக்கு நான் எங்கே போவேன் என நிரூப் கேட்பது போல உருவாகி உள்ள இந்த மீம் வேற லெவல் க்ரியேட்டிவிட்டி.


Click it and Unblock the Notifications











