டிடி நடிக்கிறதால இப்படி ஒரு டைட்டிலா...சுந்தர்.சி.,யை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : டைரக்டர் சுந்தர்.சி இயக்கி வரும் புதிய படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்த்து விட்டு, சுந்தர்.சி,யை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உள்ளத்தை அள்ளித்தா, உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், அருணாச்சலம், தலைநகரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் காமெடி படங்களை இயக்கி சினிமாவில் பிரபலமானார் டைரக்டர் சுந்தர்.சி. இதுவரை 34 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள சுந்தர்.சி 19 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் காமெடிக்கு திரும்பிய சுந்தர்.சி
ஆரம்பத்தில் காமெடி படங்களை இயக்கிய கலக்கிய சுந்தர்.சி திடீரென பேய் படங்களை இயக்க துவங்கினார். அரண்மனை, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் மிகப் பெரிய காமெடி படம் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் சுந்தர்.சி.இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாதம் துவங்கி, தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

மாளவிகாவும் நடிக்கிறாரா
ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி, சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கியமான ரோல்களில் நடித்து வரும் இந்த படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மாளவிகா நடிப்பிற்கு திரும்ப உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது பற்றி படக்குழு இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

அப்படி என்ன டைட்டில்
தற்போது இந்த படத்தின் டைட்டில் பற்றி தான் கோலிவுட்டே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது. சுந்தர்.சி தனது படத்திற்கு காஃபி வித் காதல் என டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் படக்குழு டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பட்டாம்பூச்சிக்காக காத்திருக்கும் சுந்தர்.சி
அதே சமயம் சுந்தர்.சி, ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுந்தர்.சி போலீசாகவும், ஜெய் கொலைகாரனாகவும் நடித்துள்ளனர். ஒரே சமயத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இரண்டாவது படம் இது.

சுந்தர்.சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்த சமயத்தில் சுந்தர்.சி இயக்கும் படத்தின் டைட்டிலை பார்த்து விட்டு, இதில் டிடி நடிப்பதால் இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளீர்களா என நெட்டிசன்கள் கேட்டு, கலாய்த்து வருகின்றனர். டிடி, விஜய் டிவியில் பிரபலங்களுடன், காஃபி வித் டிடி என்ற பிரபலமான நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதை குறிப்பிட்டு தான் நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











