நீங்க கோட் மாத்தி போடும் போதே தெரியும் இப்படி ஆகும்ன்னு...டபுள் எவிக்ஷனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாசில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவித்து வருகின்றன. இதனை இன்றைய ப்ரோமோவில் கமலும் உறுதிப்படுத்தி உள்ளார். இன்று இரண்டு பேர் வெளியேற போகிறார்கள். உள்ளே உள்ளவர்களுக்கு தெரியாது என என சைகையில் சொன்னார் கமல்.

இன்றைய முதல் ப்ரோமோவில் கமலின் இந்த எக்ஷ்பிரசன்ஸ், வார்த்தை பேசாமலேயே அனைத்தையும் புரிய வைத்த கமலின் நடிப்பு வேற லெவல் என ரசிகர்கள் பாட்டி வருகிறார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த டபுள் எவிக்ஷன் இன்று நடைபெற போகிறது என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 டபுள் எவிக்ஷன்

டபுள் எவிக்ஷன்

முதலில் அக்ஷரா தான், குறைவான ஓட்டுக்களைப் பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக கூறப்பட்டது. பிறகு ஒருவர் இல்லை, இருவர் வெளியேற்றப்பட போகிறார்கள். அக்ஷராவுடன் சேர்த்து அவரது நெருங்கிய நண்பர் வருணும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட போகிறாராம்.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டபுள் எவிக்ஷனை கமலும் உறுதி செய்துள்ளதால் அதை வைத்து வருண் மற்றும் அக்ஷராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த வாரம் அக்ஷராவும், வருணும் ஒரே கோட்டை மாத்தி, மாத்தி போட்டுக் கொண்டது, முத்தம் கொடுத்தது போன்றவற்றை கலாய்த்து வருகிறார்கள்.

முத்தம் கொடுத்த அக்ஷரா

முத்தம் கொடுத்த அக்ஷரா

இந்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கின் போது கயிற்றை பிடித்தபடி வருண் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த அக்ஷரா, கயிற்றை விட்டு விட்டு எழுந்து செல்லும் போது, வருணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றார். இதனால் பாவனியை தொடர்ந்து, அக்ஷராவும் முத்த சர்ச்சையில் சிக்கினார். அக்ஷரா முத்தம் கொடுத்ததை வருணும் சிரித்தபடி ஏற்றுக் கொண்டது ஹைலைட்டே.

கோட்டை மாற்றிக் கொண்ட வருண்

கோட்டை மாற்றிக் கொண்ட வருண்

இதே போல் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருந்த போது சிபி தூங்கியதற்காக நாய் குறைத்தது. இது பற்றி இந்த வார கேப்டனான தாமரை, சிபியிடம் சீரியசாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது மெயின் டோரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த வருணின் பேண்ட் டிசைன் கொண்ட கோட்டை, அவர் அருகில் அமர்ந்திருந்த அக்ஷரா அணிந்திருந்தார்.

அப்பவே தெரியும் எங்களுக்கு

அப்பவே தெரியும் எங்களுக்கு

பிறகு சிறிது நேரத்தில் பிரியங்காவின் குடும்பத்தினர்கள் வந்த போது அக்ஷரா தான் போட்டிருந்த கோட்டை கழற்றி, சிபியிடம் கொடுத்தார். பிறகு அதே கோர்ட்டை வருண் அணிந்து கொண்டார். இதை கவனித்த நெட்டிசன்கள், நீங்க ஒரே கோட்டை மாத்தி மாத்தி போடும் போதே தெரியும் இப்படி தான் ஆகும். நீங்க கோட்டை விட போகிறீர்கள் என்று என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

க்ளூ கொடுத்தாரா கமல்

க்ளூ கொடுத்தாரா கமல்

கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து போட்டியாளர்களிடம் தனித்தனியாக பேசிய கமல், வருண் மற்றும் அக்ஷராவிற்கு ஒரே மாதிரி அட்வைஸ் வழங்கினார். இப்படியே போனால் உங்களுக்கும் வெற்றிக்கும் இடையேயான தூரம் அதிகமாகி விடும் என்றார். இது இன்றைய எவிக்ஷன் பற்றி நேற்றே கமல் க்ளு கொடுத்து விட்டார் போல என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X