Don't Miss!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- News
கொடுங்கோல்.. தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
என்னது...மங்காத்தா 2 எடுக்க போறாரா விக்னேஷ் சிவன்...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : ஏகே 62 படம் பற்றி விக்னேஷ் சிவன் பேட்டியில் கூறிய தகவலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்க போகிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் ரிலீசானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஏற்கனவே லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்து விட்டது.
அஜித்
பிறந்தநாள்..
நெகட்டிவ்
டேக்
போடாத
விஜய்
ரசிகர்கள்..
அஜித்
ரசிகர்கள்
என்ன
பண்ண
போறாங்க?

ஏகே 62 கதை பற்றி சொல்லுங்க
இந்த சமயத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் ப்ரொமோஷனுக்காக சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசில் பேசிய விக்னேஷ் சிவனிடம், அஜித் ரசிகர் ஒருவர் ஏகே 62 கதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விக்கி, இந்த கதைக்காக நான் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளேன். நிச்சயம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் குஷியாகினர்.

இதை டிரை பண்ண போறேன்
இதைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன், வாலி மற்றும் மங்காத்தா படங்களில் அஜித்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக மங்காத்தா படத்தில் இன்டர்வெல் சீனில் அஜித் செஸ் காயின்களை வைத்த படி பிளான் போட்டு, கடைசியில் வில்லன் டைப்பில் சிரித்து இருப்பாரே அந்த சீன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ஒன்றை ஏகே 62 படத்தில் ட்ரை பண்ணலாம் என இருக்கிறேன் என கூறி உள்ளார்.

மங்காத்தா 2 எடுக்க போறாரா
இதை கேட்ட நெட்டிசன்கள், உங்க கிட்ட ஏகே 62 படத்தை எடுக்க சொன்னா, மங்காத்தா 2 எடுக்க போறது போல பேசிக்கிட்டு இருக்கீங்க. நிஜமாவே மங்காத்தா 2 தான் எடுக்க போறீங்களா. கண்டிப்பா படம் பிளாஃப். ஏதுக்கும் ஏகே 62 படத்திற்கு அஜித் வேற டைரக்டர யோசிக்கிறது நல்லது என கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர், என்ன ப்ரோ...பீஸ்ட் படம் சொதப்பினதால தலைவர், நெல்சனை மாத்த நினைச்சது போல காத்துவாக்குல காதல் படத்தை பார்த்துட்டு அஜித்தும் அதே முடிவுக்கு வந்திருக்காராமே. அது என்னன்னு கேளுங்க என கூறி உள்ளனர்.

செம பிளான்ல இருக்காங்க
அஜித் தற்போது ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் உள்ளார். ஜுலை மாதத்திற்கு முன் ஏகே 61 படத்தை முடிக்க வேண்டு என போனி கபூர் சொல்லி விட்டதால் படு சுறுசுறுப்பாக ஷுட்டிங் நடந்து வருகிறதாம். இதை முடித்த கையோடு ஏகே 62 படத்திலும் நடித்து முடிக்க அஜித் பிளான் செய்துள்ளாராம். அதனால் ஜுன் மாதத்தில் கல்யாணத்தை முடித்து விட்டு, ஏகே 62 ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்க விக்னேஷ் சிவனும் முடிவு செய்திருக்கிறாராம்.