Stray Dogs Issue: நாய்க்கு வெறி புடிச்சுடுச்சினா சத்தியமா கொல்லலாம்.. அன்றே கணித்த கமல்ஹாசன்

சென்னை: தெரு நாய்களை முறையாக பராமரிக்க வேண்டும், அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட விவாதத்தை விட, நீயா நானா நிகழ்ச்சியில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் அது தற்போது சமூகத்தில் பரவலாக விவாதிக்கப்படும் தலைப்பாக மாறிவிட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் பலரும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சாதாரணமான ஒன்றாக பார்த்தது என்பது பலருக்கும் அதிர்ச்சிதான்.

இப்படி இருக்கும்போது, இணையவாசிகள் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதுவும் இணையவாசிகள் பலரும் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய கருத்துகளையும் அவ்வாறு பேசியவர்களையும் போட்டு தாளித்து வருகிறார்கள். சில இணையவாசிகள் தனிமனித தாக்குதல் நடத்தியதையும் காண முடிகிறது. பலரும் நீயா நானா நிகழ்ச்சி இந்த விஷயத்திற்கு தீர்வு சொல்லவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நீயா நானா ஒரு விவாத நிகழ்ச்சி. நீயா நானா நிகழ்ச்சி என்பது சென்னை மாநாகராட்சியின் மாமன்ற உறுபினர்களின் சபை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டம், அதன் நீட்சியாகத்தான் இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நீயா நானா சமூகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக உள்ள தெரு நாய் பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளது.

Netizens Trolls Who Support Stray Dogs With Kamal Haasan Aalavandhan Movie Scenes
Photo Credit:

நெட்டிசன்கள் கேள்வி: தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று சொல்லும் பலரும் சென்னை போன்ற பெரு நகரத்தில் இருந்து அதன் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இது தொடர்பாக ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. சக மனிதர்கள் மீது அக்கறை காட்டாத இவர்கள், தெரு நாய்கள் மீது இரக்கப்படுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்து வருகிறார்கள்.

நான் வளர்த்த நாயை: இந்நிலையில் இணையவாசிகள் சிலர் உலக நாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை கத்தரித்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது அந்த காட்சியில் கமல்ஹாசன், " நான் வளர்த்த நாயை நானே எப்படிக் கொல்வேன். ஆனால் அந்த நாய்க்கு வெறிபுடுச்சா கொல்லலாம்" என்று கூறுகிறார். இந்த காட்சியை இணையத்தில் பகிர்ந்து அன்றே கணித்தார் ஆண்டவர் என்று இணையவாசிகள் ஃபயர் விட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X