தனுஷ்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.. ஓவராக கலாய்க்கும் இணையவாசிகள்.. பிரபலமும் சேர்ந்துட்டாரே!

சென்னை: நடிகர் தனுஷின் இட்லி கடை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் வழக்கமாகவே தனுஷ் படம் வெளியானால், அந்த படத்தில் இருக்கும் குறைகளை அதிகம் பெரிதாக்கி, படத்தின் நிறைகளை காற்றில் பறக்கவிடும் இணையவாசிகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்படினாவற்றிக்கு தனுஷ் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது பதிலையும் கொடுத்து இருந்தார்.

இப்படி இருக்கும்போது இட்லி கடை படம் நன்றாக இருந்தாலும், இடலி கடை படத்துடன் வெளியாகி உள்ள காந்தாரா சாப்டர் 1 படம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால், இட்லி கடை படத்துடன் அதனை ஒப்பிட்டு பல்வேறு மீம்ஸ்கள், கலாய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி இணையத்தில் அதிகம் கவனத்தைப் பெற்ற மீம் ஒன்றை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை பெற்றுள்ளது.

Netizens Trolls With Memes to Dhanush Idli Kadai Affects Rishab Shetty Kantara Chapter 1

பேமிலி ஆடியன்ஸ்: இட்லி கடை படம் தனுஷின் 52 வது படம். இந்த படத்தை தானே எழுதி, இயக்கி நடிக்கவும் செய்துள்ளார் தனுஷ். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பாடல்களை எழுதி பாடவும் செய்துள்ளார் தனுஷ். இப்படி இருக்கும்போது, படத்தின் கதையை தனது சிறுவயது நினைவுகள் உடன் சேர்த்து, கற்பனையாக உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். எளிமையான கதை, நேர்த்தியான இயக்கம், திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், பேமிலி ஆடியன்ஸுக்கு ஏற்ற செண்டிமெண்ட் உடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பார்த்த பலரும் தனுஷைப் பாராட்டி வருகிறார்கள்.

இட்லி கடைக்கு பிரச்னை: இப்போது இட்லி கடை படத்திற்கு என்ன பிரச்னை என்றால், காந்தாரா சாப்டர் 1 படம் வெளியானது தான். இந்த படம் ஏற்கனவே வெளியான காந்தாரா படத்தின் ப்ரீகுவல் பாகம். இப்படி இருக்கையில் படம் நேற்று அதாவது அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதால், இட்லி கடை படத்தின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது.

Netizens Trolls With Memes to Dhanush Idli Kadai Affects Rishab Shetty Kantara Chapter 1

கலாய் வீடியோ மீம்: இந்நிலையில் காந்தாரா படத்தால் இட்லி கடை படத்தின் வசூல் குறைந்து விட்டது என்ற பேச்சு திரையுலகிலேயே ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் தனுஷ்க்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ என்று விமர்சித்து வருகிறார்கள். அதாவது இட்லி கடை படம் நன்றாக இருந்தாலும் காந்தாரா சாப்டர் 1 படம் அதைவிட நன்றாக உள்ளாதால், ரசிகர்களின் ஆதரவு அதிகமாக காந்தாரா சாப்டர் 1 படத்திற்குத்தான் உள்ளது. இப்படி இருக்கையில் நெட்டிசன்கள் குறிப்பாக மீம் கிரியேட்டர்கள், வடிவேலுவின் காமெடி ஒன்றை எடுத்து அதில் இட்லி கடை மற்றும் காந்தாரா சாப்டர் 1 என்ற கேப்ஷன்களை இட்டு கலாய்த்து வருகிரார்கள். இந்த மீம் வீடியோவை ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் , இணையவாசிகளுடன் சேர்த்து ப்ளூ சட்டை மாறனும் இட்லி கடை படத்தை கலாய்க்கிறாரோ என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X