»   »  நீங்க இமயமலைக்கே போயிடுங்க: ரஜினியை விளாசும் நெட்டிசன்ஸ்

நீங்க இமயமலைக்கே போயிடுங்க: ரஜினியை விளாசும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல்- வீடியோ

சென்னை: ரஜினியின் ட்வீட்டை பார்த்து பலரும் கோபமாக கமெண்ட் போட்டுள்ளனர்.

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடியபோது ஒருவர் போலீஸ்காரரை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பார்த்த ரஜினிகாந்த் கோபமாக ட்வீட்டியுள்ளார்.

காவல்துறையினர் தாக்கப்பட்டதை ரஜினி கண்டித்துள்ளார்.

ட்வீட்

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும் என்று ரஜினி ட்வீட்டியுள்ளார்.

எதிர்ப்பு

ரஜினியின் ட்வீட்டை பார்த்த பலரும் தேவைப்படும் விஷயத்திற்கு எல்லாம் வாய் திறக்காமல் இதற்கு மட்டும் பேச வந்துவிட்டீர்களா? இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இமயமலை

போலீஸ்காரர் ஒருவர் பைக்கை எட்டி உதைத்ததில் உஷா பலியானது குறித்து ரஜினியிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் இமயமலைக்கு கிளம்பிச் சென்றதை மக்கள் மறக்கவில்லை.

அறிவுரை

ஐயா, ஆன்மீக அரசியல்வாதி உங்களின் அறிவுரை எங்களுக்கு வேண்டாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

தகுதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலவரம் செய்த காவலரை கண்டித்து ஒரு அறிக்கை விட தைரியமில்லாத நீங்கள் இதை சொல்ல தகுதி இல்லை உங்களுக்கு என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Netizens are unhappy after seeing Rajinikanth's latest tweet condemning the attack on a policeman in Chennai on tuesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X