பொறுமையாக புத்தி சொல்ல சிம்பு ஒன்றும் கமல் கிடையாது...இன்று தரமான சம்பவம் இருக்கோ
சென்னை : வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களை சிம்பு லெஃப் அண்ட் ரைட் வாங்கிய ப்ரோமோ ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், இன்று தரமான சம்பவம் காத்திருக்கு என கூறி வருகிறார்கள்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதும், கடந்த வாரம் முதல் புது ஹோஸ்ட்டாக சிம்பு என்ட்ரியாக உள்ளார். வந்ததும் ஆடியன்சை சந்திப்பதற்கு முன்பே போட்டியாளர்களை தனியாக சந்தித்து ஜாலி பண்ண சொல்லி வாக்குறுதி கேட்டார். அவர்களும் சிம்புவை பார்த்த குஷியில் கண்டிப்பாக ஜாலி பண்ணுவோம் என்றார்கள்.

சொதப்பிய போட்டியாளர்கள்
ஆனால் வழக்கம் போல் இந்த வாரத்திலும் டாஸ்க் அனைத்தையும் சொதப்பி போர் அடிக்க வைத்துள்ளனர். இந்த வாரம் கிராமத்து டாஸ்கிலும் போட்டியாளர்கள், வழக்கமான சண்டை, அழுகை, பிரச்சனைகளையே செய்தனர். இந்த வார தலைவராக நிரூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமினேஷனில் 7 பேர் உள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன், லாஸ்லியாவின் வைல் கார்டு என்ட்ரி ஆகியன இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்பு என்ன கமலா
வழக்கமாக வார இறுதியில் வரும் கமல், போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அட்வைஸ் செய்வார். ஆனால் புது ஹோஸ்டான சிம்பு, கமல் அளவிற்கு பக்குவமாக பிரச்சனைகளை கையாள்வாரா என அனைவரும் கேட்டு வந்தனர். ஆனால் பொறுமையாக அட்வைஸ் செய்து கொண்டிருக்க சிம்பு ஒன்றும் கமல் கிடையாது என்பதை ப்ரோமோவிலேயே நிரூபித்து விட்டார் சிம்பு.

கடுப்பாகி கத்திய சிம்பு
வந்த முதல் வாரத்திலேயே போட்டியாளர்களின் பெர்ஃபாமன்சை பார்த்து கடுப்பாகி விட்டார் சிம்பு. இன்றைய ப்ரோமோவில், மக்கள் பார்க்கிறார்கள் என்பதையே நீங்கள் மறந்து விட்டீர்கள். பார்ப்பவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என முகத்திற்கு நேராக கடுமையாக கூறி விட்டார். இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும் சிம்பு போட்டியாளர்களை கையாளும் முறை பலரையும் கவர்ந்துள்ளது.
Recommended Video

நாங்களும் அத தான் சொல்றோம்
இந்த ப்ரோமோவை பார்த்த பலரும், அவங்க எங்க சார் டாஸ்க் பண்றாங்க. நிரூப்பிற்கு செம்பு தூக்கவே நேரம் சரியாக உள்ளது. அதே தான் நாங்களும் உங்களுக்கு சொல்றோம். பிக்பாஸ் ஒரு மணி நேரம் பார்க்கிறவர்கள், 24 மணி நேரம் பார்க்கிறவங்களுக்கு முதல்ல மதிப்பு கொடுங்க. இதை பார்க்கும் போது உங்கள நீங்களே திட்டிக்கிற போல தெரியுது. பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என எங்கள் அனைவரும் நன்றாக தெரியும் என்கின்றனர் பலர். மேலும் பலர், மொத்தமாவே சிம்பு இந்த காட்டு காட்டுறாரே...இனி போட்டியாளர்களை தனித்தனியாக விட்டு விளாசினால் எப்படி இருக்கும் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











