நயன்தாரா பிறந்தநாளில் விக்கி போட்ட போஸ்ட்.. அப்போ அது இப்போ இல்லையா?! கவலையில் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Nayanthara Birthday Surprise| Mookuthi Amman | Vignesh Shivan

சென்னை: நடிகை நயன்தாரா பிறந்தநாளில் விக்னேஷ் சிவன் போட்ட போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

பல சர்ச்சைகளையும் ஏமாற்றங்களையும் தாண்டி நடிகை நயன்தாரா இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஏற்கனவே சந்தித்த காதல் தோல்விகளாலும் இணையத்தில் கசிந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களாலும் மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா, தற்கொலை முயன்றதாக கூட செய்திகள் வெளியானது.

விக்னேஷ் சிவனுடன் காதல்

விக்னேஷ் சிவனுடன் காதல்

அத்தனை அவமானங்களையும் தாண்டி விடாமுயற்சியுடன் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன்.
ஏற்கனவே இரண்டு காதல்களில் தோல்வியை சந்தித்துள்ள நயன்தாரா, திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

நட்சத்திர காதல் ஜோடி

நட்சத்திர காதல் ஜோடி

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியாக இருவரும் வலம் வருகின்றனர்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

இருவீட்டாரும் இவர்களின் காதலுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் எப்போது திருமணம் என ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

காதலருடன் கொண்டாட்டம்

காதலருடன் கொண்டாட்டம்

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி நயன்தாரா தனது 35வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

விக்னேஷ் சிவன் போஸ்ட்

விக்னேஷ் சிவன் போஸ்ட்

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன் பிறந்தநாளில் பதிவிட்டிருக்கும் போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரமிப்படைகிறேன்

பிரமிப்படைகிறேன்

அவர் தெரிவித்திருப்பதாவது, என் வாழ்க்கையின் அன்பே பிறந்த நாள் வாழ்த்துகள்.. இப்போது இருப்பது போலவே நேர்மையானவராக, தைரியமானவராக, வலிமையானவராக, லட்சியமானவராக, ஒழுக்கமானவராக, கடின உழைப்பாளியாக, பக்தியுள்ளவராக மற்றும் கடவுள் பயமுள்ள நபராகவே இருங்கள்! நீங்கள் வாழ்க்கையிலும், வேலையிலும் மேலும், மேலும் சாதிக்க வேண்டும். வாழ்க்கையின் சிறந்த தருணங்களைப் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! எப்போதும் உங்களால் பிரமிப்படைகிறேன்! என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டாவது?

இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர் மேலும் மேலும் சாதித்துக்கொண்டிருந்தால் எப்போது கல்யாணம், குழந்தை குட்டிங்கன்னு பாக்குறது என கேட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா என்றும் கவலையுடன் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X