»   »  ரூ 26 கோடியில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம்!- பொதுக்குழுவில் அறிவிப்பு

ரூ 26 கோடியில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம்!- பொதுக்குழுவில் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ 26 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று சங்கத்தின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம், சென்னை லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், துணைத் தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளராக கார்த்தி ஆகியோர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது.

New building for Nadigar Sangam at the cost of Rs 26 cr

நாசர் பேசுகையில், நடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. சங்கத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளதை கருதி பலர் உதவ முன் வந்துள்ளனர். நடிகர் சங்கம் சார்பில் நலித்த நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர்களுக்காக பல நலத் திட்டங்கள் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டன.

புதிய கட்டடம் கட்ட பொதுக்குழு 100 சதவீத அதிகாரம் நிர்வாகக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்ட நிதி வசூல் செய்யவும் நிர்வாகக் குழுவுக்கு பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது. கட்டிடம் கட்ட திரட்டப்படும் நிதியை கையாளவும் நிர்வாகக் குழுவுக்கு பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது.

கட்டிடம் கட்ட கிட்டதட்ட 26 கோடி ரூபாய் செலவாகும். அதை எப்படி திரட்டப்போகிறோம். எப்படி கட்டிடத்தை கட்டி முடிக்கப்போகிறோம் என்று விவாதித்தோம். ஏப்ரல் இறுதியில் கட்டிடப் பணியை தொடங்கி, 2018க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் சங்க புதிய கட்டிடம் மூலம் நடிகர் சங்கத்துக்கு வருடம் ரூ.6 கோடி வருமானம் வரும் அளவுக்கு திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. நடிகர் சங்க கட்டிடத்தில் 1000 பேர் அமரக்கூடிய பெரிய அரங்கம், சிறிய கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்கு கூடம், சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவை அமைய இருக்கிறது. பிரிவியூ தியேட்டர் கட்டும் செலவை சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஏற்றுள்ளனர். கல்யாண மண்டபம் கட்டித்தரும் செலவை ஐசரி கணேஷ் ஏற்று இருக்கிறார்," என்றனர்.

English summary
The newly elected Nadigar Sangam functionaries announced new building for the Sangam at the cost of Rs 26 cr.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil