»   »  புதிய கட்டண விகிதம்... இவ்வளவுதான் வசூலிக்கிறாங்களான்னு பாத்துக்கங்க!

புதிய கட்டண விகிதம்... இவ்வளவுதான் வசூலிக்கிறாங்களான்னு பாத்துக்கங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பதில் ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. இஷ்டத்துக்கு சில அரங்குகளில் டிக்கெட் வசூலிப்பதாக தகவல் வருகிறது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸ்களில்

மல்டிப்ளெக்ஸ்களில்

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கட்டண விவரம்

இன்று முதல் ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாய் 60 காசு.
ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.128
ரூ.10 டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசு (எஸ்கேப், சத்யம் சினிமாஸ், அபிராமி, பிவிஆர், ஐநாக்ஸ், ஏஜிஎஸ், பேலஸோ, லக்ஸ், தேவி போன்ற மல்டிப்ளெக்ஸ்களில் இந்த டிக்கெட்)

இரண்டு தியேட்டர்கள் கொண்ட காம்ப்ளக்ஸ்களில்

இரண்டு தியேட்டர்கள் கொண்ட காம்ப்ளக்ஸ்களில்

இரண்டு மற்றும் மூன்று திரைகள் கொண்ட ஈகா, சங்கம், உட்லண்ட்ஸ், ஆல்பட், உதயம் போன்ற அரங்குகளில் கட்டண விகிதம், தியேட்டருக்கு தியேட்டர் மாறுபடுகிறது. ஒற்றைத் திரையரங்கமான காசியில் மல்டிப்ளெக்ஸை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒற்றைத் திரை அரங்குகள்

ஒற்றைத் திரை அரங்குகள்

சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.50 டிக்கெட் கட்டணம் ரூ.59 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் ரூ.11.80 என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஏவிஎம் ராஜேஸ்வரி, கேஸினோ போன்றவை.

ஏசி இல்லாத தியேட்டர்கள்

ஏசி இல்லாத தியேட்டர்கள்

குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.30 டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் 40 காசு என்றும் ரூ.5 டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் 90 காசு என்றும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

English summary
Here is the ticket rates of Tamil Nadu cinema theaters.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil