twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!

    By Shankar
    |

    Kalanithi Maran
    ராமநாதபுரம்: ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள பொருள்களை அபகரித்து தனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மீது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கேபிள்டிவி ஆபரேட்டர் புகார் கூறியுள்ளார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், ராமநாதபுரம் எஸ்பி அனில்குமாரிடம் கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது இன்று காலை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    அந்தப் புகார் மனுவில், "நான் 1998 முதல் கேபிள் ஆபரேட்டராக இந்தப் பகுதியில் தொழில் செய்துவந்தேன்... 2008ல் இங்கே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க ரூ. 15 லட்சம் செலவில் தேவையான சாதனங்களை வாங்கி வைத்திருந்தேன்.

    இந்நிலையில், கலாநிதி மாறன் தூண்டுதலில் என்னை மதுரை மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், என்னை மிரட்டினர். அந்தக் கட்டுப்பாட்டு அறையை மூடிவிடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றை உன் பேரில் எழுதி உள்ளே தள்ளிவிடுவேன் என்று ஏசி குமாரவேல் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, கலாநிதி மாறன் என்னை ஃபோனில் மிரட்டினார்.

    என்னிடமிருந்து வலுக் கட்டாயமாக ரூ. 15 லட்சம் பெறுமான பொருள்களை அபகரித்துக் கொண்டு, என்னை மேலும் தொழிலில் ஈடுபட முடியாமல் தடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

    என்னை ஃபோனில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கலாநிதி மாறன், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் சரவணன் மற்றும் கமலக்கண்ணன், ஏசி குமாரவேல் ஆகியோர் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று புகார் அளித்துள்ளார்.

    English summary
    A cable operator from Ramanathapuram lodged a complaint on Sun Group chairman Kalanithi Maran for threatening him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X