»   »  ஜிஎஸ்டியால்... நடிகர் சங்க கட்டடத்துக்கு வந்த நெருக்கடி!

ஜிஎஸ்டியால்... நடிகர் சங்க கட்டடத்துக்கு வந்த நெருக்கடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜிஎஸ்டி என்ன... எத்தனை வரி போட்டாலும் அதனையெல்லாம் தயாரிப்பாளர் தலையில் கட்டித் தப்பித்து விடுவார்கள் நம் நடிகர் நடிகையர்கள். ஆனால் இது நடிகர் சங்க கட்டடம் தொடர்பானது.

நடிகர் சங்கத்துக்கு புது கட்டடம் கட்டப்படும் என்ற வாக்குறுதியோடுதான் சங்க தேர்தலையே சந்தித்தார் விஷால். வெற்றி பெற்றதும் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். இடையில் பல்வேறு வழக்கு இடர்பாடுகளைக் கடந்து கட்டடம் வேலையாகிக்கொண்டு இருக்கிறது.

New crisis for Nadigar Sangam building

இந்நிலையில் திடீரென மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியால் 24 கோடியாக இருந்த கட்டட செலவு 30 கோடியாக மாறிவிட்டதாம். எனவே இந்த சிக்கலை சமாளிக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடுகிறார்கள்.

இதில் எப்படியாவது ரஜினி, கமலை கலந்துகொள்ள வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

English summary
Nadigar Sangam building construction is facing a crisis due to GST. The budget cost has raised to 30 cr from 24cr due to GST.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil