»   »  இரிடியம் மோசடி பின்னணியில் ஒரு புதுப்படம்... இருக்கவே இருக்கார் பவர் ஸ்டார்!

இரிடியம் மோசடி பின்னணியில் ஒரு புதுப்படம்... இருக்கவே இருக்கார் பவர் ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மண்ணுளிப் பாம்பு, பழங்கால பெட்ரோமாக்ஸ் லைட், நாகரத்தினக் கல், காந்தப் படுக்க சமாச்சாரங்களின் வரிசையில் இடம்பெறுவது இரிடியம் மோசடி.

இருப்பதிலேயே மிகவும் அடர்த்தி கொண்ட தனிமம் ப்ளாட்டினம். அதற்கு முந்தைய நிலையில் இருப்பது இரிடியம். 2000 டிகிரி செல்சியஸில் கூட உருகாதது.

இதற்கு மதிப்பு அதிகம். கிடைப்பது அருமை. எனவே அத்தனை சுலபத்தில் கிடைக்காத இரிடியம் பற்றி கட்டுக் கதைகள் பரப்பி காசு பார்த்து வருகிறது ஒரு கூட்டம்.

கட்டுக் கதை

கட்டுக் கதை

கோவில் கோபுர கலசத்தில் இடி விழுவதால் அந்த கலசம் அதிக மதிப்புள்ள இரிடியமாக மாறி விடும் என்றும், அத்தகைய கலசங்களை விற்பனைக்குத் தருவதாகக் கூறி ஒரு கூட்டம் பல கோடி மோசடி செய்தபடி உள்ளது.

இரிடியம்

இரிடியம்

இந்த மோசடிக் கும்பலை மையப்படுத்தி சமீபத்தில் சதுரங்க வேட்டை படம் வெளியானது நினைவிருக்கலாம். மீண்டும் அதுபோன்ற ஒரு கதை படமாகிறது. படத்துக்கு இரிடியம் என்றே தலைப்பிட்டுள்ளனர்.

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

இப்படத்தில் புதுமுகம் மோகன் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆருஷி நடிக்கிறார். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாவா லட்சுமணன், கும்கி அஸ்வின், யோகி பாபு, மதுமிதா, ஐஸ்வர்யா என பலரும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறார் ஷாய் முகுந்தன். ஒளிப்பதிவை கோபி சபாபதி கவனிக்கிறார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இப்படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்தது. காஞ்சிபுரம், செய்யாறு, கலவை, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில்தான் இதுபோன்ற இரிடிய, நாகரத்தினக் கல் மோசடி கும்பல் அதிகமாக நடமாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யு சான்று

யு சான்று

சென்சாரில் படம் பார்த்த அதிகாரிகள் படத்தை பாராட்டி ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர். விரைவில் ‘இரிடியம்' திரைக்கு வர இருக்கிறது.

English summary
Power star Srinivasan is playing important role in a new movie based on Iridium cheating.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil