»   »  'கடலை போட பொண்ணு வேணும்!'

'கடலை போட பொண்ணு வேணும்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் இங்கே அதிகம். மதுரையில இருக்கற பையன் ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னை போனா தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி செய்ததா?என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடும் யதார்த்தத்தோடும் சொல்ல வருகிறது 'கடலைபோட பொண்ணு வேணும்' படம்.

New movie: Kadala Poda Ponnu Venum

முதல் படம் 'ரீங்காரம்' ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே 'கடலை போட பொண்ணு வேணும்' என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்து பலசாலி என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சிவகார்த்திக். இவர் சமுத்திரகனி, சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.

ரீங்காரம் படத்தின் படப்பிடிப்பைப் பார்க்க வந்த தயாரிப்பாளர்தான் 'கடலைபோட பொண்ணு வேணும்' படத்தின் தயாரிப்பாளர். அந்த படப்பிடிப்பில் இயக்குனரின் திறமையைப் பார்த்து அமைந்த படம்தான் 'கடலை போட பொண்ணு வேணும்'.

New movie: Kadala Poda Ponnu Venum

ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோ. ஹீரோயின் மனீஷா. இவர்களைத் தவிர படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா இப்படி ஒரு காமெடி பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இஎன்ஜே ஹரீஷ். பர்மா படத்தோட இசையமைப்பாளர் சுதர்சன்தான் இசை. படத்தொகுப்பு வில்சி. ஆர்ஜி மீடியா சார்பில் ராபின்சன் தயாரித்திருக்கிறார்.

New movie: Kadala Poda Ponnu Venum

இயக்குனரின் அடுத்த படமான 'பலசாலி' ஷூட்டிங்கும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. பலமே இல்லாத ஒருத்தன் எப்படி பலசாலி ஆகிறான் என்பதுதான் கதை. இது சூது கவ்வும் பாணியிலான பிளாக் ஹியூமர்.

English summary
Kadala Poda Ponnu Venum is a black comedy movie written and directed by Sivakarthik.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil