»   »  நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்ட புதிய படம்... விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா இணைகிறார்கள்!

நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்ட புதிய படம்... விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா இணைகிறார்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்க கட்டடத்துக்காக நிதி திரட்ட புதிய படம் நடித்துத் தர தன்னுடன் ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா ஆகியோர் இணையப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.ய

நேற்று நடந்த கதகளி செய்தியாளர் சந்திப்பில் விஷால் கூறுகையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறோம்.

New movie to raise funds for Nadigar Sangam building

அதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோருடன் நானும் இணைந்து நடிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம்.

இந்த படத்தில் மேலும் பல கதாநாயகர்கள் இணையலாம். இதற்கான இயக்குநர் தேர்வு நடைபெறுகிறது. மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்கப் போகிறேன்.

இந்தப் படத்துக்கு நடிகர் சங்கமே தயாரிப்பாளராக இருக்கும்," என்றார்.

English summary
Actor Vishal says that he would join hand with Jayam Ravi, Karthi, Jiiva for a movie to raise funds for Nadigar Sangam building.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil