»   »  இவரு பாட... அவரு மியூசிக் போட... ஒரே கூத்துதான் போங்க!

இவரு பாட... அவரு மியூசிக் போட... ஒரே கூத்துதான் போங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனிருத் பாட இருக்கிறார். இந்த வெறித்தனமான காம்போவால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

'நீங்க ஷட் அப் பண்ணுங்க...' என பிக் பாஸ் வீட்டில் ஓவியா கூறியதை வைத்து 'பலூன்' படத்திற்காக இந்தப் பாடல் உருவாகிறது. 'பலூன்' திரைப்படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிக் பாஸ் ஃபீவர் :

பிக் பாஸ் ஃபீவர் :

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. அவர் பேசிய வசனங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட். இந்நிலையில் ஓவியா 'நீங்க ஷட் அப் பண்ணுங்க...' என்று கூறியது செம்ம வைரல் ஆனது. தற்போது பலூன் படத்தில் இதே வார்த்தையைப் பயன்படுத்தி யுவன் ஒரு பாடலை உருவாக்கவுள்ளார்.

யுவன் - அனிருத் :

யுவன் - அனிருத் :

இந்த பாடலைப் பாடப்போவது வேறு யாருமில்லை... தற்போது தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டு இருக்கும் அனிருத் தான். இதனால், இரு தரப்பு ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.

'பலூன்' இயக்குநர் :

'பலூன்' இயக்குநர் :

இதுகுறித்து 'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ், 'யுவனும் அனிருத்தும் இணைவது இதுதான் முதல்முறை. யுவன் போட்ட டியூனுக்கு அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என யோசித்து அவரிடம் கேட்டோம். பல வேலைகளுக்கு இடையேயும் அவர் ஒப்புக்கொண்டார். இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜா எழுதியிருக்கிறார்.' எனக் கூறியுள்ளார்.

எப்போ ரிலீஸ் :

எப்போ ரிலீஸ் :

இந்தப் பாடல் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்படும். அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 31 அன்று மற்றொரு சிங்கிள் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'பலூன்' திரைப்படம் செப்டம்பர் இறுதியில் திரைக்கு வர இருக்கிறதாம்.

English summary
Anirudh sings in yuvan music for 'Baloon' movie. This song is based on oviya's viral dialogue 'Neenga shut-up pannunga'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil