»   »  விஜய் 62... இவரா மியூசிக் டைரக்டர்?

விஜய் 62... இவரா மியூசிக் டைரக்டர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்போதுமே, தனது ஒரு படம் வெளியாவதற்கு இரு மாதங்களுக்கு முன்பாக அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் போட்டுவிடுவார் விஜய்.

அப்படித்தான் தனது 62வது படத்தை, மெர்சல் வெளியாவதற்கு சில மாதங்கள் இருக்கும்போது முருகதாஸ் இயக்க, லைகா தயாரிக்க ஒப்புக் கொண்டார் விஜய்.

இவர்கள் யாருமில்லை

இவர்கள் யாருமில்லை

பெரும் வெற்றிப் பெற்றுள்ள மெர்சல் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் விஜய்யின் 62வது படத்துக்கு மீண்டும் அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் ஆகியோரில் யாராவது இசையமைப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களில் யாரும் இசையமைக்கவில்லை.

சாம் சிஎஸ்

சாம் சிஎஸ்

விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கெனவே இவர் கைவசம் சக்தி, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற படங்கள் உள்ளன.

கிரீஸ் கங்காதரன்

கிரீஸ் கங்காதரன்

அதேபோல ஒளிப்பதிவாளரையும் புதிதாகப் பிடித்துள்ளனர். மலையாலத்தில் அங்கமாலி டைரீஸ் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன்தான் விஜய் 62 க்கு ஒளிப்பதிவு செய்கிறார். இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட தகவல்.

ஜனவரியில்

ஜனவரியில்

இப்படத்தின் திரைக்கதையில் ஏஆர்முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

English summary
Sources say that Sam CS will be the music director for Vijay 62.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil