»   »  இனி எப்பவுமே இப்படித்தான்.. தயாரிப்பாளர் சங்கத்தின் புது ரூலுக்கு செம வரவேற்பு!

இனி எப்பவுமே இப்படித்தான்.. தயாரிப்பாளர் சங்கத்தின் புது ரூலுக்கு செம வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
க்யூபுக்கு செக் வைக்கும் பக்கா பிளான்!- வீடியோ

சென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழில் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வரும் நிலையில், ஸ்ட்ரைக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலகட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், எதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால், அரசு சார்பாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளது.காந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

New policy to be followed by producers council

கடந்த ஒன்றரை மாதங்களாக ரிலீஸ் ஆகாததால் நிறைய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. அவற்றை வெளியிட புதிய கொள்கையை ஃபாலோ செய்யவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். அதன்படி, முதலில் சென்சார் சான்றிதழ் பெற்ற படத்துக்கு ரிலீஸில் முன்னுரிமை கொடுக்கப்படுமாம்.

முதலில் சென்சார் பெற்ற படங்கள் முதலில் ரிலீஸ் எனும் திட்டப்படி வெளியானால், சிறு பட்ஜெட் படங்கள் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸால் அதிகமாக பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது காத்திருக்கும் படங்கள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் எப்போதுமே இதே வழிமுறையைப் பின்பற்றலாம் என தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். இனி, பெரிய படங்களுக்கு பயந்து சிறிய படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக, 'காலா' ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகவிருந்து ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போனாலும், ஸ்ட்ரைக் முடிந்த பிறகு உடனே வெளியிடமுடியாது. அதற்கு முன்பே சென்சார் பெற்று காத்திருக்கும் படங்கள் தான் முதலில் ரிலீஸ் செய்யப்படும். இந்த வழிமுறை தான் இனி எப்போதுமே பின்பற்றப்பட இருக்கிறது.

English summary
Since March 1, many films are waiting for the release due to Producers council Strike. The producer council is going to have a new policy to release them. Accordingly, the first censor certified film will be given priority in the release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X