»   »  நடிகர் சங்கத்தில் ரஜினி, கமலுக்கு முக்கிய பதவி... பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்?

நடிகர் சங்கத்தில் ரஜினி, கமலுக்கு முக்கிய பதவி... பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு முக்கிய பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் பரபரப்புகளுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் அணியை வீழ்த்தி, விஷால் அணியினர் அதிக பதவிகளைக் கைப்பற்றினர்.

நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், பசுபதி, உதயா, பூச்சிமுருகன், சங்கீதா, சோனியா உள்பட 20 பேர் தேர்வாகியுள்ளார்கள்.

பொதுக்குழுக் கூட்டம்...

பொதுக்குழுக் கூட்டம்...

புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே இந்த வாரத்திலேயே நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3,139 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது.

ரஜினி, கமல்...

ரஜினி, கமல்...

இந்நிலையில், நடிகர் சங்கத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு முக்கிய பதவிகள் வழங்கவும் ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவுரவ ஆலோசகர்கள்?

கவுரவ ஆலோசகர்கள்?

ரஜினியை நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராகவும், கமலை கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா?, அல்லது இருவரையும் கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கலாமா? என நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தீர்மானம்...

தீர்மானம்...

விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
The new administratives of south Indian actors association is planning to give new posts for Rajinikanth and Kamal hasan.
Please Wait while comments are loading...