»   »  ரஜினியின் 2.ஓ... தமிழில் ஒரு புதுமையான புரமோஷன் முயற்சி!

ரஜினியின் 2.ஓ... தமிழில் ஒரு புதுமையான புரமோஷன் முயற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி அலை ஓய்ந்து வரும் நிலையில், அடுத்து ரஜினியின் எந்திரன் புயல் தமிழ் திரைகளைக் கலக்கத் தயாராகிறது.

ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வரும் 2.0வை உலகெங்கும் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட பக்காவாக திட்டமிட்டு வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் 2.ஓ' படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

துபாயில்

துபாயில்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

புதுவகை புரமோஷன்

புதுவகை புரமோஷன்

2.ஓ படத்தின் புரமோஷனில் புதுமையான முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, படத்தின் புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிர்வாகி ராஜு மகாலிங்கம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

உலகப் படம்

உலகப் படம்

தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள 2.ஓ, சர்வதேசப் படமாகக் கருதப்படுகிறது. எனவே உலகம் முழுவதும் இதற்கான புரமோஷன் செய்யப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ஒரு தமிழ்ப் படத்தின் புரமோஷனுக்காக உலக சுற்றுலா நடத்த இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த நாடுகளில்?

எந்தெந்த நாடுகளில்?

அதுவும் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் நடக்க வாய்ப்பு உள்ளது.

சீனாவிலும்

சீனாவிலும்

2.ஓ படத்தை சீனாவிலும் அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் வெளியாகும்போதே சீனாவிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
Lyca Productions has announced a world tour for Rajinikanth's 2.O movie promotions

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil