»   »  முக்கியமான சீன்களை ரிலீசுக்கு முன்னாடியே லீக் பண்றதுதான் இப்போதைய பப்ளிக்குட்டி!

முக்கியமான சீன்களை ரிலீசுக்கு முன்னாடியே லீக் பண்றதுதான் இப்போதைய பப்ளிக்குட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தில் இப்போது ஒரு புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது. அதாவது பப்ளிசிட்டி ஸ்ட்ன்ட்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட முக்கிய காட்சிகளை படத்தின் ரீலீசுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்து, பரபரப்பைக் கிளப்புவதுதான் இந்த ஸ்டன்ட். இதை முதலில் ஆரம்பித்தவர் இயக்குநர் ஷங்கர். சிவாஜி த பாஸ் படத்தின் பாடல்கள், சில காட்சிகளை இப்படித்தான் லீக் செய்தார்.

New promotional technique of film makers

அடுத்து விஜய் படம் தலைவா, புலிக்கு இப்படிச் செய்தார்கள். பாகுபலி காட்சிகள் வெளியானது கூட இப்படி ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான் என்கிறார்கள்.

இசையமைப்பாளரும் ஹீரோவுமான விஜய் ஆன்டனிதான் அடிக்கடி இப்படி முக்கிய காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களைக் கவர முயன்று வருகிறார். ஆனால் சைத்தானில் இந்த உத்தி பலிக்கவில்லை. சைத்தானே.. அப்பாலே போ என்று கூறிவிட்டார்கள்.

இருந்தாலும் மற்ற படங்களின் இயக்குநர்கள், ஹீரோக்களும் தங்கள் பட காட்சிகளை வெளியிடும் வேலையில் மும்முரமாக உள்ளனர்.

முன்பெல்லாம் பாடல்கள்தான் ஒரு படத்தின் விளம்பரத்துக்கு பெரிதுவும் உதவியாக இருக்கும். ஆனால் இப்போதைய படங்களில் பாடல்களின் லட்சணம் என்னவென்று தெரிகிறதல்லவா...

எனவே இனியும் அந்த பழைய டெக்னிக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை போயே போய்விட்டதால், இப்படி ஒரு உத்தியைக் கையாளத் தொடங்கிவிட்டனர் போலும்.

English summary
Nowadays Tamil film makers and heroes keen on releasing key sequences from their movies for promotions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil