அடிதடிக்காக புதிய டாஸ்க்..பழங்குடிகள்-ஏலியன்கள்..கடும் மோதலை சந்திக்கபோகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸில் இந்த வாரம் கடுமையான போட்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கினால் இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பழங்குடியினர், ஏலியன்ஸ் என இரண்டு அணிகள் ஒருவர் இடத்துக்குள் மற்றவர் நுழைந்து திருடும் போட்டி என்பதால் கடுமையாக மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது.

தொட்டால் சிணுங்கிகளாக இருந்தவர்கள், ஹாலிடேவுக்கு வந்தவர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள் இந்தவாரம் தங்கள் திறமையை காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது எனலாம்.

கடுமையான மோதல் டாஸ்க்கை கொடுத்துள்ள பிக்பாஸ்

கடுமையான மோதல் டாஸ்க்கை கொடுத்துள்ள பிக்பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இதுவரை இருந்த டாஸ்க்குகளில் கடினமான டாஸ்க் ஒன்று இன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே மோதலை வரவழைக்கும் டாஸ்க்காகும். இந்த டாஸ்கை இரு அணிகளாக பிரிந்து செய்ய உள்ளனர். இந்த வாரம் இந்த டாஸ்க் மூலம் கடுமையான மோதல் அணிக்குள்ளே நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜா ராணி டாஸ்க் சாதாரணமாக இருந்தபோதே பெரும் சண்டை வந்தது. ஆனால் இம்முறை சண்டையிட்டவர்கள் ஓரணியில் உள்ளனர்.

கேப்டன்ஷிப்பை பின்னுக்கு தள்ளும் டாஸ்க்

கேப்டன்ஷிப்பை பின்னுக்கு தள்ளும் டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் அடுத்த தலைவராக அசீம் நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவர் கேப்டன் ஆனது முதல் அதிரடி காட்டி வருகிறார். அனைவரும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து சமையல், கிளீனிங், வெஸ்ஸல் வாஷிங் என கடுமையாக உத்தரவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் புது டாஸ்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார். இதனால் அசீம் கேப்டன்ஷிப் பின்னுக்கு போய் டாஸ்க் மோதல் முன்னுக்கு வரும் என்று தெரிகிறது. இதனால் அசீம் தனது கேப்டன்ஷிப் பெர்ஃபாமன்ஸை காட்ட முடியாமல் போகலாம். ஆனால் அசீம் சும்மாவே அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பவர். ஆகவே கிடைத்த வாய்ப்பை விட மாட்டார்.

வலுவான பழங்குடியினர் டீம்

வலுவான பழங்குடியினர் டீம்

டாஸ்க்கில் சுவாரஸ்யம் என்னவென்றால் குழுவில் உள்ளவர்கள் இரண்டாகப் பிரிந்து ஒரு குழு பழங்குடியினராகவும், ஒரு குழு ஏலியன்ஸ் ஆகவும் வேடமிட வேண்டும். பழங்குடியினரிடம் அவர்கள் பெயர் பொரித்த வைரக்கல் இருக்கும். ஏலியன்ஸ்களிடம் மலர்கள் இருக்கும் பழங்குடியினரில் இருந்து மலர்களை திருட ஏலியன்ஸ் குழு இருக்கும் பகுதிக்குள் செல்ல வேண்டும். ஏலியன்ஸ் குழுவில் இருந்து வைரத்தை திருட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். இதில் அவர்கள் சிக்கிக் கொண்டால் மற்றவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் வலுவான அணியாக பழங்குடியினர் அணி உள்ளது. இதில் அசீம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், ஷிவின், ராம்குமார், மைனா ஆகியோர் இருக்கின்றனர்.

ஏலியன்ஸ் டீமில் 3 சொத்தை போட்டியாளர்கள்

ஏலியன்ஸ் டீமில் 3 சொத்தை போட்டியாளர்கள்

ஏலியன்ஸ் டீமில் மணிகண்டன், அமுதவாணன், தனலட்சுமி, ஆயிஷா, ரச்சிதா, குயின்சி, ஜனனி உள்ளிட்டோர் இருக்கின்றனர். ஏலியன்ஸ் அணி சற்று வலு குறைந்த அணியாக உள்ளதை காண முடிகிறது. இதில் அமுதவாணன், மணிகண்டன், தனலட்சுமி போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளனர். மற்றவர்கள் அந்த அளவுக்கு போட்டியிட மாட்டார்கள். ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் மட்டுமே. ஆனால் பழங்குடியினர் அணியில் அசீம், ஏடிகே, விக்ரமன், கதிரவன், ஷிவின் போன்றவர்கள் வலுவாக உள்ளனர். இதனால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்த வாரம் சண்டை வாரம்

இந்த வாரம் சண்டை வாரம்

தனலட்சுமி, அசீம் இருவரும் கடுமையாக மோதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் மோதல் தொடரவும் வாய்ப்பு உள்ளது. இந்த வார டாஸ்க் இந்த போட்டி காரணமாக அசீமின் கேப்டன்ஷிப் அவ்வளவாக எடுபட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்வார் என தெரிகிறது. அதற்கு உதாரணமாக காலையிலேயே குயின்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அசீம். கேப்டனாக வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் டாஸ்க்கில் தன்னை முன்னிலைப்படுத்தி விளையாடுவார் என தெரிகிறது. மணிகண்டன், மைனா, ரச்சிதா, குயின்சி போன்றவர்கள் கடந்த வாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். இதனால் இந்த போட்டியில் தங்களை வேகப்படுத்தி முன்னிலைப்படுத்தி காட்டுவார்கள் என தெரிகிறது. பொதுவில் இந்த வாரம் சுவாரஸ்யமான வாரமாக மாறப்போகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X