சந்தானத்தின் புது பட அப்டேட்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நகைச்சுவை நாயகன் சந்தானம் ஆவார்.
நகைச்சுவை நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
சந்தானம் நடிப்பில் சில படங்கள் வெளிவரவுள்ள நிலையில் அவரின் புது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

முழு நேர ஹீரோ
லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமான சந்தானம் படங்களில் காமெடியன் ரோலில் நடிக்க தொடங்கி பின்னர் ஹீரோவாகவும் நடித்தார். சமீப காலமாக காமெடியன் ரோலில் நடிப்பதை தவிர்த்து முழு நேர ஹீரோவாகவே நடித்து வருகிறார் சந்தானம்.

நல்ல வரவேற்பு
சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் வெளியானது. காதல் & காமெடி படமான இது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. எதிர்ப்பார்த்தது போல் பாரிஸ் ஜெயராஜ் நல்ல முறையில் வசூல் செய்து வெற்றி பெற்றது.

மூன்று படங்கள்
சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசையில் உள்ளது. டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், சபாபதி என சந்தானத்தின் லைன் அப் நம்பிக்கை அளிக்கிறது. இதில் சபாபதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மட்டும் முடியாமல் உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்ன குமார் அடுத்ததாக இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











