ஜப்பான் படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியான கார்த்தி... திடீரென விலகிய விஜய் சேதுபதி?

சென்னை: கார்த்தியின் விருமன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஸியான கார்த்தி

பிஸியான கார்த்தி

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்திருந்த விருமன் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம் விருமன் படத்தின் வசூல் கார்த்தியின் மார்க்கெட்டை உச்சத்தில் ஏற்றி வைத்துள்ளது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தீபாவளிக்கு சார்தார்

தீபாவளிக்கு சார்தார்

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கும் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்த்தியின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அமர்க்களமான ட்ரீட் ரெடியாக உள்ளது. சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதால், ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சர்தார் படத்தின் இறுதிக்கட்ட பணிகள், பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் என பிசியாக இருக்கும் கார்த்தி, சீக்கிரமே அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.

ஜப்பான் ஷூட்டிங்

ஜப்பான் ஷூட்டிங்

குக்கு, ஜோக்கர், ஜிப்ஸி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராஜு முருகன், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு 'ஜப்பான்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கார்த்தி ரொம்பவே புதுமையான லுக்கில், வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அதற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

விலகிய விஜய் சேதுபதி?

விலகிய விஜய் சேதுபதி?

'ஜப்பான்' படத்தில் கார்த்தியுடன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை படக்குழு விரைவில் கன்ஃபார்மாக அறிவிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதிக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் சுனில் கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X