திருமணத்திற்கு அம்மா வரவில்லை.. ஆசி வாங்க கொச்சி பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி!

சென்னை : திருமணத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இன்று கேரளா சென்றுள்ளனர்.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Pressmeet After Marriage #Celebrity | Filmibeat Tamil

சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் கொழுகொழு பெண்ணாக தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் நயன்தாரா. முதல் படத்திலேயே "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என பாட்டுப்பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வல்லவன், சந்திரமுகி, கஜினி கள்வனின் காதலி என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

ரஜினி, அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்,விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் நயன்தாரா, ராஜா ராணி, மாயா,டோரா, அறம் நானும் ரவுடிதான், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து, லேடி சூப்பர் ஸ்டார் ஆனார் நயன்தாரா.

காதல் மலர்ந்தது

காதல் மலர்ந்தது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த ஜோடியை பார்க்கும் அனைவரும் எப்போது கல்யாணம் என கேட்டு வந்தனர்.

தடபுடலான திருமணம்

தடபுடலான திருமணம்

இதையடுத்து, ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வியந்து பார்த்து வாய்பிளக்கும் அளவுக்கு, 20க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் மந்திரம் ஓத தடபுடலாக திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

திருமணம் முடிந்த கையோடு வேண்டுதலை நிறைவேற்ற நயன்தாரா விக்னேஷ் சிவனும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, நேற்று, ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

கேரளா பயணம்

கேரளா பயணம்

இந்நிலையில், புதுமணத் தம்பதியினர், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கேரளா சென்றுள்ளனர். கொச்சி விமான நிலையத்தில், நயன்தாராவும் விக்கியும் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நயன்தாராவின் தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக இருவரும் கேரளா சென்றுள்ளனர். இன்னும் சில நாட்கள் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X