லீக்கானது பொன்னியின் செல்வன் ஸ்டில்லா? கரிகாலன் ஸ்டில்லா?...குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பாகுபலி சாதனையை இது ஓவர் டேக் செய்யுமா என்பதை பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அதிக பொருட் செலவில், தனது கனவு ப்ராஜெக்டாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணி ரத்னம். இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள, பிரம்மாண்ட வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 2023 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரிலீசுக்கு தயாராகும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. சாட்டிலைட், டிஜிட்டல் உரிமங்களும் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சையில் டீசர் ரிலீஸ்
பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட ரிலீசிற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை மிகப் பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிது. லேட்டஸ்ட் தகவலின், ஜுலை 7 ம் தேதி தஞ்சையில் பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இது தான் தஞ்சையில் நடத்த காரணமா
டீசர் வெளியீட்டை தொடர்ந்து, பிரஸ்மீட்டையும் தஞ்சையிலேயே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். படத்தின் கதைக்களம் தஞ்சை நகரம் என்பதால் தான் சென்டிமென்ட்டாக அங்கு டீசர் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் ஸ்டில் லீக்கானதா
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்டில் ஒன்று லீக்காகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் ரோலில் தான் விக்ரம் நடித்துள்ளார். இவர் குதிரையில் வர, ஏராளமானவர்கள் தாரை தப்பட்டையுடன் அவரை சுற்றி வரும் ஸ்டில் தான் லீக்காகி உள்ளது.

ஐஸ்வர்யா ஸ்டிலும் லீக்கானது
ஏற்கனவே படத்தில் ஐஸ்வர்யா ராய், ராணி கெட்அப்பில் நடித்துக் கொண்டிருந்த ஷுட்டிங் ஸ்பாட் போட்டோ ரிலீசானதால், டென்ஷனான மணிரத்னம், இனி செட்டில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்தார். மீறி போட்டோவை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

எச்சரிக்கை விடுத்த மணிரத்னம்
மணிரத்னத்தின் எச்சரிக்கைக்கு பிறகு எந்த ஸ்டிலும் லீக் ஆனவில்லை. இருந்தாலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் விக்ரம், போர் சீன் ஒன்றிற்காக வாள் பயிற்சி எடுக்கும் போட்டோ ஒன்று லீக்காகி இருந்தது. இந்த சமயத்தில் தற்போது விக்ரம் நடத்துள்ள மற்றொரு சீனின் ஸ்டிலும் இணையத்தில் கசிந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

என்னப்பா இப்படி நடக்குது
படத்தின் ரிலீஸ், ப்ரொமோஷன் வேலைகள் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற ஸ்டில்கள் லீக்காவது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என படக்குழுவினரும் ரசிகர்களும் நினைக்கிறார்கள். இதனால் மேலும் இது போன்ற ஸ்டில்கள் லீக்காமால் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி ரசிகர்கள் படக்குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கசிந்தது பொன்னியின்செல்வன் ஸ்டில் இல்லையா
அதே சமயம் இது பொன்னியின் செல்வன் ஸ்டில் கிடையாது. ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட கரிகாலன் படத்தின் ஸ்டில். இது பழைய கரிகாலன் படத்தின் ஸ்டில் என நெட்டிசன்கள் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











