»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் இயக்கிய முதல் படம் திரையிடப்படுவதற்கு முதல் நாள் ரூ. 25,000 பணத்தை திருட்டுக் கொடுத்துள்ளார்புதுமுக இயக்குனர் முருகேஷ்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமான் நீண்ட நாள் உதவியாளராக இருந்த இவர் தற்போது தனியே இன்று முதல் என்றபடத்தை இயக்கியுள்ளார். இப் படம் இன்று (மே 1) வெளியாகிறது.

இந் நிலையில் வட பழனியில் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனதுமாமியாருக்கு பணம் தருவதற்காக சிலரிடம் ரூ. 25,000 பணம் திரட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்.மாமியாரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அவர் தனது மகளிடம் கொடுத்து பத்திரமாக வைக்கக் கூறியுள்ளார்.

ஆனால் மருத்துவமனையில் பணம் திருடு போய்விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் முருகேஷ்கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil