Don't Miss!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Lifestyle
ஆண்களே! உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கணுமா? அதுக்கு இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்நேரம்லாம் தியேட்டர்கள் எப்படி தெறிக்கப்போகுதோ.. வலிமை புதிய புரமோ!
சென்னை: அப்டேட் கொடுப்பது இல்லை சரியாக புரமோஷன் செய்வது இல்லை என போனி கபூரை அஜித் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வந்த நிலையில், இந்த வாரம் முழுக்க தெகட்ட தெகட்ட புரமோஷன் கொடுக்க தயாராகி விட்டார் தயாரிப்பாளர் போனி கபூர்.
அடுத்த வாரம் வியாழக்கிழமை வலிமை நாளாக மாறியிருக்கும் என அவர் தற்போது புதிய புரமோ ஒன்றை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் அஜித் குமாரை திரையில் காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
“வலிமை“
சண்டை
காட்சிகள்
உலகத்தரத்திற்கு
இருக்கும்…
ஹூமா
குரேஷி
பேட்டி
!

அடுத்த வியாழக்கிழமை
கடந்த இரு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் இந்த நாளுக்காகத் தான் காத்திருக்கின்றனர். அடுத்த வியாழக்கிழமை வலிமை திருநாளாக திரையரங்குகள் திருவிழா கோலம் காணப் போகின்றன என தயாரிப்பாளர் போனி கபூர் புதிய புரமோ வீடியோ ஒன்றை ஷேர் செய்து அஜித் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

காலை 4 மணிக்கே
அதிகாலை 4 மணிக்கே வலிமை FDFS காட்சிகள் ஆரம்பமாக போகவுள்ள நிலையில், முதல் நாளில் வலிமை படத்தின் வசூல் வேறமாறி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான எந்தவொரு படங்களும் படைக்காத பாக்ஸ் ஆபிஸ் சாதனையை வலிமை படைக்குமா? என்கிற கேள்வி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள் மத்தியிலும் எழுந்துள்ளன.

தெறிக்கவிடும் ஸ்டன்ட்
வலிமை படத்தில் மிகவும் முக்கியமாக அந்த பேட்ரோல் வண்டி சேஸிங் சீன் தான் இருக்கும் என தெரிகிறது. ஒவ்வொரு புரமோவிலும் அதன் அட்டகாசமான ஸ்டன்ட் காட்சிகளை புரமோவாக போட்டு வலிமை படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக அதிகரித்து வருகிறது.

இது போதும் போனி கபூர்
வலிமை அப்டேட்டை சரியாக கொடுக்கவில்லை என்றும் அதற்கான புரமோஷனை சரியாக பண்ணவில்லை என்றும் தயாரிப்பாளர் போனி கபூரை இதுவரை எல்லை மீறி திட்டி வந்த அஜித் ரசிகர்கள் எல்லாம் இப்போது அவர் அடுத்தடுத்து மூச்சுத் திணற திணற கொடுத்து வரும் அப்டேட்களால் திக்குமுக்காடி போயுள்ளனர்.
Recommended Video

ரன் டைம்
வலிமை திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் ஸ்க்ரீன் ஷாட்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ஒட்டுமொத்தமாக வலிமை திரைப்படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ரன் டைமை கொண்டிருக்கின்றன. அதில், அந்த பேட்ரோல் வண்டி சேஸிங் சீன் மட்டும் 4.22 நிமிடங்கள் உள்ளதாம்.

300 கோடி வசூல் வருமா?
பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ள அஜித் குமாரின் வலிமை திரைப்படம் ப்ரீ பிசினஸே 300 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் நிஜ வசூல் 300 கோடியை நிச்சயம் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.