»   »  மீசைய முறுக்கு, விக்ரம் வேதா, நிபுணன்... அடுத்தடுத்து வெற்றிகள்... உற்சாகத்தில் கோடம்பாக்கம்!

மீசைய முறுக்கு, விக்ரம் வேதா, நிபுணன்... அடுத்தடுத்து வெற்றிகள்... உற்சாகத்தில் கோடம்பாக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா உலகம் இரண்டு வாரங்களுக்கு முன்புவரை தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. அதுவும் ஜிஎஸ்டி என்ற பெயரில் தியேட்டர்காரர்கள் செய்த அழுகுணி ஆட்டத்தால் தியேட்டருக்குப் போகவே வெறுத்து ஒதுங்கிக் கொண்டிருந்தனர் மக்கள்.

அவர்களை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டன விக்ரம் வேதா மீசைய முறுக்கு படங்கள்.


அந்தப் படங்கள் வெளியாகி தியேட்டர்கள் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்னும் இரு படங்கள் வெளியாகின.


நிபுணன்

நிபுணன்

அவற்றில் ஒன்று நிபுணன். அர்ஜுனின் ஆக்ஷன் படம். விறுவிறுப்பான இந்த த்ரில்லருக்கு செம ரெஸ்பான்ஸ். பாக்ஸ் ஆபீஸில் வெற்றி என்று செய்தி வந்ததுமே, நன்றி அறிவிப்பு செய்ய ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துவிட்டார்கள் படத்தின் ஹீரோ அர்ஜுனும் இயக்குநர் அருண் வைத்தியநாதனும்.


கதை மீது நம்பிக்கை

கதை மீது நம்பிக்கை

அருண் வைத்தியநாதன் பேசுகையில், "நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிகப் பெருமை. இந்தப் படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.


ஊடகங்கள் - மக்கள்

ஊடகங்கள் - மக்கள்

தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது, "ஊடகங்களின் கருத்தும், மக்களின் கருத்தும் ஒன்றிப் போனது இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்," என்றார்.


150 படங்கள்

150 படங்கள்

அர்ஜுன் பேசுகையில், "நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரைக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றி," என்றார்.


English summary
Actor Arjun has thanked media and public for the success of his recent out Nibunan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil