»   »  ஒரு நாள் இரவில் மாறியது சத்யராஜின் நைட் ஷோ

ஒரு நாள் இரவில் மாறியது சத்யராஜின் நைட் ஷோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவான நைட் ஷோ படத்தின் தலைப்பை ஒரு நாள் இரவில் என்று படக்குழுவினர் மாற்றி வைத்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக் தான் இந்த நைட் ஷோ. சத்யராஜ், யூகி சேது, வருண், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

படத் தொகுப்பாளர் ஆண்டனி இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக இயக்குனராக மாறுகிறார். நவீன் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஏ.அழ.விஜய் தனது தந்தை அழகப்பனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

Night Show Changed Oru Naal Iravil

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் திடீரென்று படக்குழுவினர் மாற்றி வைத்திருக்கின்றனர். நைட் ஷோவில் இருந்து ஒரு நாள் இரவிலாக புரோமோஷன் பெற்றிருக்கிறது படத்தின் தலைப்பு.

படம் வெளியாக 2 வாரங்களே உள்ள நிலையில் ஏன் இந்த மாற்றம் என்று கேட்டால் எல்லாம் வரிவிலக்குதான் காரணம் என்று கூறுகின்றனர்.

தமிழில் தலைப்பு வைத்தால் தான் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்ற காரணமும், படத்தின் தலைப்பு இன்னும் அழுத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு சிலரின் அறிவுறுத்தலும் தான் இதற்குக் காரணமாம்.

இப்படத்தின் திரைக்கதையை எழுதி தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கியிருக்கும் ஆண்டனி, வழக்கம் போல தனது எடிட்டிங் பணிகளையும் படத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக அளித்திருக்கிறாராம்.

விரைவில் வெளியாகும் இப்படம் மலையாளத்தைப் போலவே தமிழிலும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரில் உள்ள பேய்ப்படங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் தான் இந்தப் படத்தின் விநியோக உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது.

English summary
Sathyaraj's Night Show Title Now Changed Oru Naal Iravil, This Movie will be Released on November 20th in Worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil