பிரபாஸூடன் கிசுகிசு.. இதெல்லாம் எங்கயிருந்து கிளம்புதுன்னே தெரியலையே..மெகா குடும்பத்து நடிகை ஷாக்!

By

ஐதராபாத்: தனக்கும் நடிகர் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வந்த செய்தியை, அந்த பிரபல நடிகை மறுத்துள்ளார்.

Recommended Video

MegaStar Chiranjeevi palatial Bungalow | Lock Down | Pollution Free Hyderabad

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து சினிமாவில் வதந்திகள் அதிகரித்து வருகின்றன. தவறான தகவல்களும் வருகின்றன.

த்ரோபேக் போட்டோ மாதிரி, த்ரோபேக் செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

நிஹாரிகா திருமணம்

நிஹாரிகா திருமணம்

இந்நிலையில், அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் பிரபல ஹீரோ பிரபாஸூக்கும் நடிகை நிஹரிகாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் கடந்த சில நாட்களாக டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ரவுண்ட் கட்டின. இந்த நிஹரிகா, பிரபல தெலுங்கு ஹீரோவும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி குடும்பத்துக்குப் பெண்.

நாகபாவு மகள்

நாகபாவு மகள்

அதாவது, சிரஞ்சீவியின் தம்பி நாகபாவுவின் மகள். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாகபாபு, தமிழில், வேட்டை, விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நிஹரிகா, நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

அடுத்து தமிழில் ரொமான்டிக் படம் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், நிஹரிகா. ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

கடந்த 2016 ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த முடபாப்பு ஆவக்காய் வெப்சீரிஸ் அவரது திறமையை டோலிவுட் சினிமாவுக்கு அறியப்படுத்தியது. வெப் சீரிஸ் மீது நிஹாரிகாவிற்கு இருக்கும் ஆர்வம், தொடர்ந்து அவரை பல வெப்சீரிஸ்களை தயாரித்து நடிக்கவும் வைத்துள்ளது. நன்னா கூச்சி, மேட் ஹவுஸ் ஆகிய வெப்சீரிஸ்களையும் தயாரித்து நடித்துள்ளார்.

வியப்பாக இருக்கிறது

வியப்பாக இருக்கிறது

இந்நிலையில் இவருக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வந்துள்ள தகவலை நிஹரிகா மறுத்துள்ளார். 'இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதை மக்கள் எப்படி நம்புகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். பிரபாஸுக்கு முன்பாக நிஹாரிகா, நாக சவுர்யா, சாய் தரம் தேஜ், விஜய் தேவரகொண்டா ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X