திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை!
சென்னை: திருமணத்துக்கு முன்பு தனது குடும்பத்து தோழிகளுக்கு மெகா குடும்பத்து நடிகை பார்ட்டி கொடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், நடிகை நிஹரிகா கோனிடேலா.
தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர்.

ஹேப்பி வெட்டிங்
நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பி, நாகபாவுவின் மகள். இவரை பெரிய குடும்பத்து நடிகை என்று கூறுகின்றனர். தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நெருங்கிய உறவினர்கள்
நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.

அரண்மனை ஓட்டல்
நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உட்பட அவர்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். திருமணம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நடக்கிறது. ஐதராபாத்தில் எளிமையாக நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் திருமணம் நடக்கிறது.

ஸ்பெஷல் விருந்து
திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரர் வருண் தேஜ் கவனித்து வருகிறார். திருமணத்துக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் உதய்பூர் சென்ற அவர் அங்கிருந்து திரும்பினார். இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, தனது குடும்பத்தை சேர்ந்த தோழிகளுக்கு நடிகை நிஹரிகா, ஸ்பெஷல் விருந்து கொடுத்துள்ளார்.

சிரஞ்சீவி மகள்கள்
இந்த டின்னர் பார்ட்டியில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள்கள் சுஷ்மிதா, ஶ்ரீஜா உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை நிஹரிகா சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு சினிமா துறையினருக்காக ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications











