தாலி கட்டிய புகைப்படத்தை வெளியிட்டு.. உருக்கமான போஸ்ட் போட்ட நடிகை நிக்கி கல்ராணி.. ஒரே காதல் தான்!

சென்னை: நடிகை நிக்கி கல்ராணியை நடிகர் ஆதி இன்று திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமண புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது தாலி கட்டும் பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து நடிகை நிக்கி கல்ராணி உருக்கமான போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த நடிகை நிக்கி கல்ராணி மலையாளத்தில் வெளியன 1983 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஒக்க வி சித்திரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்த நடிகர் ஆதி தமிழில் 2007ல் வெளியான மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகர் ஆதி

நடிகர் ஆதி

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ஆதி. ஈரம் படம் தமிழில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரவாண் திரைப்படம் ஃபிளாப் ஆனது. நிக்கி கல்ராணி உடன் இணைந்து நடித்த மரகத நாணயம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ராம்சரணின் ரங்கஸ்தலம், கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி உள்ளிட்ட பல படங்களில் ஆதி நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் படமும் ஆதி மற்றும் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியாக போகிறது.

டார்லிங் நிக்கி

டார்லிங் நிக்கி

மலையாளம், கன்னட, தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார் நிக்கி கல்ராணி. ஜிவி பிரகாஷின் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமான இவர், யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஆதியுடன் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் திருமணம்

சென்னையில் திருமணம்

பெங்களூரு பெண்ணாக இருந்தாலும் நிக்கி கல்ராணி சென்னையில் செட்டில் ஆகி நீண்ட காலம் ஆகிறது. இந்நிலையில், மே 19ம் தேதியான இன்று சென்னையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமணம் கோலாகலமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்றது. அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகின.

தாலி கட்டும் புகைப்படம்

தாலி கட்டும் புகைப்படம்

இந்நிலையில், நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டிய பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிக்கி கல்ராணி 'செலிபிரேட்டிங் லவ்' என நீண்ட உருக்கமான போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார். எங்களது நல விரும்பிகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது ரொம்பவே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த புதிய பயணத்தை நாங்கள் இருவருமே இணைந்து பயணிக்கப் போகிறோம் என பதிவிட்டுள்ளார்.

நெத்தியும் நெத்தியும் முட்டிக்கிச்சு

நெத்தியும் நெத்தியும் முட்டிக்கிச்சு

நடிகர் ஆதியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே கேப்ஷனை போட்டு நிக்கி கல்ராணியின் நெற்றியில் திருமண வைபவத்தின் போது மோதும் செம ரகளையான புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X