"இந்த போட்டிக்கு தயாரா..?" - 'நிமிர்' படக்குழு நடத்தும் புகைப்பட போட்டி!
Recommended Video

சென்னை : பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'நிமிர்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. 'மகேஷின்டே பிரதிகாரம்' மலையாள படத்தின் ரீமேக்கான இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க, நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
'நிமிர்' திரைப்படத்தில் இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு எனப் பலர் நடித்துள்ளனர். தற்போது நிமிர் படக்குழு புகைப்பட ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
அமைதி, இயற்கை என்னும் தலைப்பில் அழகான புகைப்படங்களை படக்குழுவினர் அறிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். #NimirPhotographyContest போட்டியில் வெற்றி பெறுவர்கள் படக்குழுவிடமிருந்து பரிசை பெறுவதோடு இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகர்களை நேரில் சந்திக்கலாம் எனக் கூறியுள்ளார்கள்.
'நிமிர்' திரைப்படத்தில் உதயநிதி புகைப்படக் கலைஞராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ப்ரொமோட் செய்வதற்காக புகைப்படப் போட்டியை நடத்துகிறார்கள் படக்குழுவினர். புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளோர் பிரியதர்ஷன் மற்றும் படக்குழுவைச் சந்திக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











