twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில்லனாக எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன்...47 ஆண்டு கால ரீவைண்ட்

    |

    சென்னை: எம்ஜிஆர் படங்கள் என்றால் எதிர்ப்பார்ப்புடன் வரும் ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக இளமையான தோற்றம், அருமையான பாடல்களுடன் வெளியான படம் நினைத்ததை முடிப்பவன். இப்படத்தில் வில்லனும் எம்ஜிஆர் தான் என்பது தனிச்சிறப்பு.

    மகளே உயிராக... உலகே அவளாக... விஜய் டிவியில் புதிய சீரியல்... இன்று முதல் ஒளிபரப்பு! மகளே உயிராக... உலகே அவளாக... விஜய் டிவியில் புதிய சீரியல்... இன்று முதல் ஒளிபரப்பு!

    எம்ஜிஆரின் ரீமேக் படங்கள்

    எம்ஜிஆரின் ரீமேக் படங்கள்

    எம்ஜிஆர் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று நினைத்ததை முடிப்பவன். அந்த நேரத்தில் ஹாத்தி மேரா சாத்தி நல்ல நேரமாக மாற்றி எடுக்கப்பட்ட காலக்கட்டம். பல்லாண்டு வாழ்க போன்ற படங்களும் இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டது. இந்திப்படங்களை தமிழில் ரீமேக் செய்த எம்ஜிஆர் பட வரிசையில் ராஜேஷ் கன்னா நடித்து பிரபலமாக ஓடிய சச்சே ஜூதா படத்தின் தமிழ் ரீமேக் தான் நினைத்ததை முடிப்பவன்.

    அண்ணன் தங்கை பாசம்

    அண்ணன் தங்கை பாசம்

    அண்ணன் தங்கை பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எம்ஜிஆருக்கு சொல்லியா தரணும் சும்மா பின்னி விட்டார். எம்ஜிஆரின் தங்கையாக தேசிய விருதுபெற்ற சாரதா நடித்திருப்பார். பூ மழைத் தூவி பாடல் அவ்வப்போது வரும், கடைசியில் எம்ஜிஆரைத்தேடும்போது அவர் மணமக்களைப்பார்த்து பாடும் காட்சியில் அவரைத்தேடி சாரதா அலைவது உருக்கமாக இருக்கும். டிஎம்எஸ் குரலில் இந்தியில் வராத புது டியூனாக எம்எஸ்வி போட்டிருப்பார். இன்றளவும் ரசிக்கப்படும் பாடலாக அது உள்ளது.

    ஹீரோ, வில்லன் இருவரும் எம்ஜிஆரே

    ஹீரோ, வில்லன் இருவரும் எம்ஜிஆரே

    இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு ரெட்டைவேடம். வில்லன் பாத்திரமும் எம்ஜிஆரே நடித்தார். அண்டர்ஸ்டாண்ட் என விரலை சொடுக்குப்போட்டு பேசும் கொள்ளைக்கார ரஞ்சித், அப்பாவி கிராமத்து இளைஞரான சுந்தரம் என இரு வேடம். ஹீரோ வில்லன் ஆனால் வில்லன் நல்லவனாகத்தானே இருப்பார், இந்தப்படத்தில் நம்பியாருக்கு நல்லவர் வேடம் அதுவும் இன்ஸ்பெக்டராக எம்ஜிஆரின் தங்கை சாரதாவை வில்லன்களிடமிருந்து காப்பாற்றி மணப்பவராக வருவார்.

    இரண்டு வேடங்களில் எம்ஜிஆர் அசத்தல்

    இரண்டு வேடங்களில் எம்ஜிஆர் அசத்தல்

    கிராமத்து இளைஞர் சுந்தரமாக பேண்ட் வாத்திய கலைஞராகவும், ரஞ்சித்தாக கொள்ளைக்கூட்டத் தலைவனாகவும் இரண்டு ரோலில் எம்ஜிஆரின் வேடம் தனித்தனியாக இருக்கும். உடைகள் அட்டகாசமாக இருக்கும். சுந்தரம் தன்னைப்போல இருப்பதால் அவரை வைத்து தன் கொள்ளைத்திட்டத்தை அரங்கேற்ற நினைக்கும் ரஞ்சித் ஒரு கட்டத்தில் சுந்தரத்தின் தங்கை சாரதாவையும் கடத்துவார்.

    சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்

    சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்

    கடைசியில் உண்மை தெரிந்து சுந்தரம் கொள்ளையன் எம்ஜிஆரை தங்கைக் கணவர் நம்பியாருடன் சேர்ந்து பிடித்துக் கொடுப்பார். கடைசியில் கோர்ட் காட்சி பிரமாதமாக இருக்கும். இரண்டு எம்ஜிஆரும் நான் தான் அப்பாவி சுந்தரம் என போட்டி போடுவார்கள். நமக்கு யார் சுந்தரம் யார் ரஞ்சித் என்பது தெரியும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் படத்தில் இருக்கும் கேரக்டர்கள் நீதிபதி உள்ளிட்டோர் உண்மையை கண்டுபிடிக்க போராடுவார்கள்.

    ட்விஸ்ட் வைக்கும் கோர்ட் காட்சி

    ட்விஸ்ட் வைக்கும் கோர்ட் காட்சி

    இசைக்கருவியை என் அண்ணனைத்தவிர யாரும் வாசிக்க முடியாது என்று சொல்லி பூமழைத்தூவி பாடலை சாக்சோபோனில் சுந்தரம் வாசிக்க ரஞ்சித்தும் அதை வாசித்து குழப்பிவிடுவார். வளர்ப்பு நாய் மோத்தி தன் எஜமான் சுந்தரத்தை காட்டிவிடும், ஆனால் ரஞ்சித் எம்ஜிஆர் தனது வாதத்தால் ஜட்ஜை குழப்பிவிடுவார். கடைசியில் நம்பியார் பப்ளிக் பிராசிகியூட்டர் மூலம் ஒரு ட்விஸ்ட் வைப்பார். என்னதான் வில்லனாக இருந்தாலும் தாய்ப்பாசத்தை வைத்து வில்லன் எம்ஜிஆர் வாய்மூலமாகவே உண்மையை வரவழைப்பார்கள்.

    இரண்டு ஜோடிகள், இனிமையான பாடல்கள்

    இரண்டு ஜோடிகள், இனிமையான பாடல்கள்

    இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு லதா, மஞ்சுளா என இரண்டு ஜோடிகள். 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து' என பாடும் பாடல் சிறப்பான இசைக்காக பேசப்பட்டது. அதேபோல் இந்தப்படத்தில் வரும் 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' பாடலுக்கும் சிறப்பு உண்டு. அன்றைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரச்சார பாடலாக 'கண்ணை நம்பாதே' பாடலை எம்ஜிஆர் பயன்படுத்தியிருப்பார்.

    எம்ஜிஆரே திருத்திய வரிகள்

    எம்ஜிஆரே திருத்திய வரிகள்

    ' பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே' என்ற வரிகள் எம்ஜிஆரே திருத்தி எழுதியதாக மருதகாசி குறிப்பிட்டிருப்பார்.

    நம்பிக்கை ஊட்டும் தலைப்பு

    நம்பிக்கை ஊட்டும் தலைப்பு

    அண்ணன் தங்கை பாசத்தை பிரதானமாக வைத்து அதில் கிரைம் கலந்து எடுக்கப்பட்ட படம் 1975 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி வெளியாகி நன்றாக ஓடியது. உண்மையும் பொய்யும் என்கிற இந்திப்பட தலைப்பை வைக்காமல் எம்ஜிஆரின் எவர் கிரீன் தலைப்புகள் போல் 'நினைத்ததை முடிப்பவன்' என்று நம்பிக்கை அளிக்கும் பெயரை இப்படத்திற்கு சூட்டினார்கள்.

    எந்த நேரமும் இளைஞர்களைப்பற்றி சிந்தித்த எம்ஜிஆர்

    எந்த நேரமும் இளைஞர்களைப்பற்றி சிந்தித்த எம்ஜிஆர்

    இந்தப்படத்தில் குறிப்பிட வேண்டிய இரண்டு விஷயங்கள் இந்தியில் வில்லனாக நடிக்கும் தர்மேந்திரா பாடல் காட்சியில் மது அருந்துவார். ஆனால் அதேபோன்ற பாடல் காட்சியில் வில்லன் எம்ஜிஆர் மது அருந்தமாட்டார். மற்றொரு காட்சியில் வில்லன் எம்ஜிஆர் சிகரெட்டை வாயில் வைப்பார், ஹீரோ எம்ஜிஆர் நான் மட்டுமல்ல என் உருவம் கொண்டவர் கூட சிகரெட் குடிக்கக்கூடாது என எம்ஜிஆர் கன்னத்தில் அறைவார். ஆனால் இன்று ஏன் சிகரெட் குடிக்கிறார்கள், எதற்காக மது அருந்துகிறார்கள் என்பதெல்லாம் இல்லாமல் காட்சி அமைக்கிறார்கள்.

    English summary
    It's been 47 years since the release of MGR's Double Role movie 'Ninaiththathai Mudippavan'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X