கமல் முன் சண்டை போடும் நிரூப் – அக்ஷரா... அப்படி என்ன பிரச்சனை இவங்களுக்கு ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 28 வது நாளை எட்டி உள்ளது. இதற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. முதலில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் பிரியங்கா சேவ் செய்யப்படுவதாக காட்டப்பட்டது. இன்று சின்ன பொண்ணு வெளியேற்றப்படுவதாக பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் ஸ்டைலில் கடைசி நிமிடத்தில் அவருக்கு பதில் வேறு யாராவது வெளியே போக போகிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் துவங்கியதில் இருந்தே ஒவ்வொரு வாரமும் சின்ன பொண்ணு வெளியேற போகிறார் என சொல்லி விட்டு, வேறு யாராவது தான் வெளியேற்றப்படுகிறார்கள்.

மாற்றம் வருமா

மாற்றம் வருமா

இதனால் கடைசி நிமிடத்தில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கவனித்து வருகிறார்கள். நான்காவது வாரத்தின் கடைசி நாளான இன்று, அடுத்து வெளியேற போகிறவர் யார் என்பதை கமல் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

நேற்று மாஸ்க், இன்று பேட்ஜ்

நேற்று மாஸ்க், இன்று பேட்ஜ்

இந்த ப்ரோமோவில் கமல், இந்த சண்டையோட நோக்கமே எவிக்ஷன் தான். இதில் 7 சாய்ஸ் இருக்கு. யாருக்கு எது பொருந்தும் என்கிறார். எழுந்து வரும் பிரியங்கா, குழப்பமான மனநிலை கொண்டவர் என்ற பேட்ஜை அக்ஷராவிடம் கொடுக்கிறார். பதிலுக்கு அக்ஷராவும், அடுத்தவரை காயப்படுத்துபவர் என்ற பேட்ஜை பிரியங்காவிற்கு கொடுக்கிறார். நேற்று மாஸ்க் கொடுக்க சொன்னது போல், இன்று பேட்ஜ் கொடுக்கும் கேமினை நடத்த உள்ளார் கமல்.

நிரூப் - அக்ஷரா சண்டை

நிரூப் - அக்ஷரா சண்டை

நிரூப், அக்ஷராவிற்கு போலி என்ற பேட்ஜை கொடுத்ததாக கமலிடம் சொல்கிறார். அதற்கு அக்ஷரா, இப்போது கூட அவரை என்னால் மன்னிக்க முடியவில்லை என கண்கலங்கியபடி சொல்கிறார். அப்படி நான் என்ன பண்ணினேன், என்ன பிரச்சனை என சொல் என கேட்கிறார் நிரூப். நிறைய இருக்கு. அதை இப்போ சொல்ல முடியாது. நினைவிற்கு வரும் போது சொல்கிறேன் என்கிறார். இப்படி இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அக்ஷரா அழுதபடி தனியாக அமர்ந்திருக்கிறார்.

குறும்படம் போடலியே சார்

குறும்படம் போடலியே சார்

இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், இசைவாணி வார நாட்களில் முகத்தை சோகமாகவும், வார இறுதி நாட்களில் மட்டும் சிரித்தபடியும் வைத்துக் கொள்கிறார். செமயாக நடிக்கிறார் என கூறி உள்ளனர். மேலும் சிலர் நேற்று குறும்படம் எதிர்பார்த்தோம். ஆனால் போடாம விட்டுட்டீங்களே சார் என கமலை கேட்டுள்ளனர்.

அக்ஷரா அழுதுகிட்டே இருக்கார்

அக்ஷரா அழுதுகிட்டே இருக்கார்

அக்ஷரா ஓவராக சீன் போடுகிறார். அவர் எப்போதும் மற்றவர்கள் சொல்வதை கேட்பதே இல்லை. அக்ஷரா சிம்பத்தி கிரியேட் பண்ணுகிறார். ஏன் இந்த அக்ஷரா எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கார். சாதாரண விஷயங்களுக்கு கூட அழுகிறார். அப்படின்னா நீங்க ஏன் இந்த ஷோவுக்கு வரணும் என பலர் கேட்டுள்ளனர். அடுத்த வாரத்திற்கு கன்டென்ட் கிடச்சிடுச்சா என பலர் நக்கலாக கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X