முதுகுல குத்திட்ட...குற்றம்சாட்டிய பிரியங்கா...விளக்கம் கேட்ட நிரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 66 வது நாளை எட்டி உள்ளது. நிகழ்ச்சியின் பத்தாவது வாரமான இதில், இந்த வார கேப்டனாக அமீர் தேர்வானார். ஆனால் கடைசி நிமிடத்தில் தன்னிடம் உள்ள காயினின் சலுகையை பயன்படுத்தி, கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார் பாவ்னி.

இந்த வார நாமினேஷில் மொத்தம் 7 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். காயின் பவரை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பிக்க முயன்றார் நிரூப். ஆனால் அதற்காக நடத்தப்பட்ட போட்டியில் சஞ்சீவிடம் தோற்றதால், நிரூப் நாமினேஷனில் தொடர்வார் என பிக்பாஸ் தெரிவித்தார்.

மாநாடான பிக்பாஸ் வீடு

மாநாடான பிக்பாஸ் வீடு

இதைத் தொடர்ந்து இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீடு மூன்று அணிகளாக பிரிந்து, அரசியல் மாநாடாக மாறி உள்ளது. இதில் மூன்று அணிகளும் அரசியல் கட்சிகளாக மாறி விளையாடி வருகின்றன. இதில் 66 வது நாளான இன்று கேம் ஷோ நடத்தப்பட்டது. இதில் சக போட்டியாளர்கள் பற்றி யார் அதிகமாக சரியாக கணிக்கிறார்கள் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

முதுகுல குத்திட்ட

முதுகுல குத்திட்ட

இந்த டாஸ்கிற்கு பிறகு தனியே அமர்ந்திருக்கும் பிரியங்காவிடம் நிரூப் பேசுகிறார். இந்த டாஸ்க்கின் போதும், அதற்கு முன்பும் என்னை முதுகில் குத்தியதாக சொல்கிறாயே அதற்கு என்ன அர்த்தம், எதனால் என கேட்கிறார் நிரூப். அதற்கு பிரியங்கா, என் காயினை எடுத்து எனக்கு தெரியாமல் என் முதுகில் குத்தி விட்டாய் என மீண்டும் சொல்கிறார்.

காரணம் கேட்கும் நிரூப்

காரணம் கேட்கும் நிரூப்

அதை தவிர வேறு ஏதாவது காரணம் இருக்கா என கேட்கிறார் நிரூப். பிரியங்கா, அதை தவிர வேறு எதுவும் இல்லை. ஏன் வேறு ஏதாவது விதத்தில் என்னை முதுகில் குத்தி உள்ளீர்களா. நீங்க விலகி இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது என்றார். அதற்கு என்ன காரணம் என இப்போதே விளக்கி விடுகிறேன். என்னால் தான் நீங்க சரியாக கேம் ஆடுவதில்லை என ஒரு கருத்து எழுந்தது. அப்போது தான், ஃபிரண்ட்ஷிப் என்பது வெளியில் போய் கூட வைத்துக் கொள்ளலாம். இங்கு தப்பாக எதுவும் உங்களை பாதிக்க வேண்டாம் என்று தான் விலகி இருக்க முடிவெடுத்தேன் என்கிறார்.

விளக்கம் சொன்ன நீரூப்

விளக்கம் சொன்ன நீரூப்

உங்களை காயப்படுத்துவதற்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் வெளியில் அப்படி தான் காட்டப்படுகிறது. எல்லோரும் நான் என்ன செய்தாலும் அது உங்களை காயப்படுத்துவதாக இருக்கிறது என்கிறார்கள். இதை பற்றி நான் உங்களிடமே பேசி உள்ளேன் என்றார். அப்போது குறுக்கிட்ட பிரியங்கா, நீ என்கிட்ட வந்து பேசுனியா. என்னை யூஸ் பண்ணிக்காத என தனியா கூப்பிட்டு பேசுனியா. அப்படி பேச உனக்கு கூச்சமோ, பயமோ இருந்ததா என கேட்கிறார்.

யாருடனும் நெருக்கம் இல்லை

யாருடனும் நெருக்கம் இல்லை

அதற்கு பதிலளிக்கும் நிரூப், பயம் கிடையாது. நான் கமல் சார் முன்னால சொன்னது தான். எனக்கு உங்களையும் பிடிக்கும் அண்ணாச்சியையும் பிடிக்கும். நான் ஃபிரண்ட்ஷப்பை விட்டுக் கொடுக்கல. அங்கும் நான் யாருடனும் நெருக்கமாக இல்லை. ஃபிரண்ட்ஷிப்பால் தான் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்கிறார்.

கட்டி போட்டேனா

கட்டி போட்டேனா

இதைக் கேட்டு கண்கலங்கும் பிரியங்கா, சாரி. என்னால் தான்நீ கட்டிப் போட்ட போல ஒரு நிலைக்கு வந்து விட்டதாக நினைக்கிறாய் . அது தான உன் பிரச்சனை என்கிறாய். ஆனால் அதற்கு அது தவறு என நான் சொல்லவில்லை என்கிறார் நிரூப். கட்டிப்போடவில்லை. ஆனால் நான் அப்படி ஆகிவிட்டேன் என்கிறார் நிரூப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X