அப்போ கேன்சர் பேஷன்ட்டுக்காகனு சொன்னதெல்லாம் சும்மாவா நிரூப்? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: பெண்களே பொறாமைப்படும் நீண்ட தலைமுடியுடன் பிக் பாஸ் வீட்டில் இதுவரை இருந்து வந்த நிரூப் ஃபினாலேவுக்காக ஹேர்கட்டிங் செய்துள்ளார்.

ப்பா.. வாட்ட சேஞ்ச் ஓவர் என நிரூப்பின் புதிய ஹேர்ஸ்டைல் லுக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு விஜய் டிவி ஸ்கோர் செய்ய நினைத்த நிலையில், நெட்டிசன்கள் நிரூப்பை திட்ட ஆரம்பித்துள்ளனர்.

நிரூப் இதில் கூட நிலையானவராக இல்லையே என நெட்டிசன்கள் திட்டித் திர்த்து வருகின்றனர்.

லாங் ஹேர் நிரூப்

லாங் ஹேர் நிரூப்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்களில் மிக நீண்ட தலைமுடியுடன் ஆறடி ஆஜானுபாகுவாக கலந்து கொண்டவர் நிரூப் நந்தகுமார். ஆரம்பத்தில் அண்டர் டேக்கர் என ரசிகர்கள் நிரூப்பை பார்த்து வியந்து வந்த நிலையில், அதன் பின்னர் அவரை சகுனி என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

பிளான் பண்ணி ஃபைனல்ஸ்

பிளான் பண்ணி ஃபைனல்ஸ்

கடந்த வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து நிரூப் வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஹவுஸ்மேட்களே பேசி இதுவரை முகமூடி போட்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கும் ஒருவரை ஃபைனல்ஸ் அனுப்ப சொன்ன நிலையில், சரியாக பிளான் பண்ணி இதன்மூலம் எப்படியாவது ஃபைனல்ஸுக்குள் நுழைந்து விட வேண்டும் என கடைசி வரை பாவனிக்கு விட்டுக் கொடுக்காமல் இருந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

முடி வெட்டிய நிரூப்

முடி வெட்டிய நிரூப்

இதுவரை தனது நீண்ட கூந்தலை கட் பண்ணாமல் இருந்த நிரூப் நந்தகுமார் கிராண்ட் ஃபினாலேவுக்காக தனது முடியை கட் செய்துள்ளார். அதன் புகைப்படத்தை தற்போது விஜய் டிவி வெளியிட்டு வாட் எ சேஞ்ச் ஓவர் என கேப்ஷன் கொடுக்க நிரூப் ரசிகர்கள் புதிய கெட்டப்பை பார்த்து பூரித்துப் போயுள்ளனர்.

கேன்சர் பேஷன்ட்டுக்குனு சொன்னாரே

கேன்சர் பேஷன்ட்டுக்குனு சொன்னாரே

அபிநய் சிறியதாக முடி வெட்டும் படி செய்ய நிரூப் கேன்சர் பேஷன்ட்டுக்காக வளர்க்கிறேன்னு சொன்னாரே அதுவும் அவருடைய சிம்பதி ஸ்ட்ராட்டஜி தானா? ஃபைனல்ஸ் வந்து உடனே அதை மறந்து விட்டு ஹேர் கட் பண்ணிக் கொண்டாரா? கொஞ்சம் கூட நிரூப்புக்கு வெட்கமே இல்லையா? என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஓட்டுக்காக சிம்பதி

ஓட்டுக்காக சிம்பதி

புற்றுநோயாளிகளுக்கு கொடுக்க இப்போ முடியை வெட்டிக் கொண்டேன் என நிரூப் சொல்லி சிம்பதி க்ரியேட் பண்ணி ஓட்டுக் கேட்கப் போகிறார் என்றும் கமல் கடைசியாக எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொன்னாரே விஜய் டிவியும் நிரூப்பை ஃபைனல்ஸ்க்கு வர வைத்திருக்கிறதே ஒருவேளை கப் இவனுக்கு கொடுத்துடுவாங்களோ என ரசிகர்கள் பதறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X