ஜால்ரா தட்டுற... வாயை விட்டு அபிநய்யுடன் சண்டையிடும் நிரூப்
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி 38 வது நாளை அடைந்துள்ளது. இதுவரை 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது போட்டியாளர்களாக 13 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்திற்கான ஆளுமை பாவனிக்கு வழங்கப்பட்டுள்ளது. அபிநய் இந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தன்னிடம் உள்ள காயினின் பவரை வைத்து இசைவாணி இந்த வார கேப்டன் ஆனார்.

பொம்மை டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்றவர்களின் பெயர் உள்ள பொம்மையை தூக்கிக் கொண்டு கூடாரத்திற்குள் ஓட வேண்டும். இதில் கடைசியாக வரும் நபரின் கையில் உள்ள பொம்மையில் யாருடைய பெயர் உள்ளதோ அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்.

ஆக்ரோஷமான அக்ஷரா
நேற்றைய போட்டியில் பிரியங்கா போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். பிரியங்காவின் பெயருள்ள பொம்மை வைத்திருந்த தாமரையை நிரூப் தடுத்து நிறுத்தியதால் பிரியங்கா வெளியேறினார். இந்த டாஸ்க்கில் வருண், நிரூப், சிபி, அக்ஷரா ஆகியோரிடையே கடும் சண்டை நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முதல் முறையாக பீப் சத்தம் வைக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டனர்.

முதுகுல குத்திட்டியே
இந்நிலையில் நிகழ்ச்சியின் 38 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில் இசைவாணிக்கும், இமான் அண்ணாச்சிக்கும் வாக்குவாதம் நடக்கிறது. தன்னை முதுகில் குத்தி விட்டதாக இசைவாணியை பார்த்து கேட்கிறார் அண்ணாச்சி. என் பெயருள்ள பொம்மையை வைத்திருந்த நீ எதற்காக ஓடாமல் நின்றாய். அதற்கு எனக்கு காரணம் சொல் என்கிறார் அண்ணாச்சி.

இது ஊருக்கே தெரியுமே
இதற்கிடையில் ராஜு, உனக்கு அண்ணாச்சியை பிடிக்காது. அண்ணாச்சிக்கு உன்னை பிடிக்காது என்பது ஊரு உலகத்துக்கே தெரியுமே என கிண்டலாக பேசுகிறார். ஆனால் இசைவாணியோ, குத்துவதாக இருந்தால் நான் நேராகவே குத்துவேன். முதுகில் குத்த மாட்டேன் என்கிறார் அண்ணாச்சியிடம்.

கைபாவையாகிட்டியே
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதில், இசைவாணி பேசுகையில், ஐக்கியை நீ கை பாவையாக பயன்படுத்தியதாக எனக்கு தெரிகிறது என நிரூப்பிடம் சொல்கிறார். அதற்கு நிரூப், அப்படியானால் நீ அபிநய்யின் கைப்பாவையாக இருக்கிறாயா என கேட்கிறார். அப்போது அபிநய், நிரூப் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஜால்ரா தட்டுகிறாய்
அப்போது நிரூப், நீ ஜால்ரா தட்டுகிறாய் என அபிநய்யை பார்த்து கேட்கிறார். இதனால் கடுப்பான அபிநய்யும் சண்டை போடுகிறார். நிரூப் மிக கோபமாக கத்துகிறார். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள், நிரூப்பிற்கு என்ன ஆச்சு. பைத்தியம் பிடிச்சிடுச்சா. ஏன் பாலாஜி மாதிரி ஆக டிரை பண்ணுறான் என கேட்டுள்ளனர்.

என்னாச்சு நிரூப்பிற்கு
நிரூப் தான் கேம் சேஜ்சர் என சிலர் பாராட்டினாலும், சிலர், நிரூப் பைனல் வரைக்கும் போவாருன்னு நினைச்சேன். ஆனா சீக்கிரமாவே போய்ருவார் போலயே என நிரூப்பிற்கு எதிராக கமெண்ட் செய்துள்ளனர். அது பொம்மை டாஸ்க் இல்லை. மந்திரிச்ச பொம்மை. எப்படி சண்டை போடுறாங்கன்னு நீங்களே பாருங்க என சிலர் கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











